பக்கம் எண் :

159

     (கருத்து) உண்டியளித்தல் முதலான இவை யாவும் பெரியோரின்
பண்புகள் என்று பெரியோர் கூறுவர்.                       (99)

           100. நூலின் பயன்

வன்னமயில் எறிவரு வேலாயு தக்கடவுள்
     மலைமேல் உகந்தமுருகன்
வள்ளிக் கொடிக்கினிய வேங்கைமரம் ஆகினோன்
     வானவர்கள் சேனாபதி

கன்னல்மொழி உமையாள் திருப்புதல்வன் அரன்மகன்
     கங்கைபெற் றருள்புத்திரன்
கணபதிக் கிளையஒரு மெய்ஞ்ஞான தேசிகக்
     கடவுள்ஆ வினன் குடியினான்

பன்னரிய புல்வயலில் வானகும ரேசன்மேல்
     பரிந்துகுரு பாததாசன்
பாங்கான தமிழாசி ரியவிருத் தத்தின்அறை
     பாடலொரு நூறும்நாடி

நன்னயம தாகவே படித்தபேர் கேட்டபேர்
     நாள்தொறும் கற்றபேர்கள்
ஞானயோ கம்பெறுவர் பதவியா வும்பெறுவர்
     நன்முத்தி வும்பெறுவரே.

     (இ-ள்.) வன்னமயில் ஏறிவரு வேலாயுதக்கடவுள் - அழகிய
மயிலின்மேல் எழுந்தருளும் வேலாயுதம் ஏந்திய பெருமான், மலைமேல்
உகந்த முருகன் - மலைகளில் வாழ்வதை விரும்பிய முருகன்,
வள்ளிக்கொடிக்கு இனிய வேங்கைமரம் ஆகினோன் - பூங்கொடிபோன்ற
வள்ளியம்மையாரை மணக்க அழகிய வேங்கைமரம் ஆகிநின்றவன்,
வானவர்கள் சேனாபதி - அமரர் படைத்தலைவன், கன்னல்மொழி
உமையாள் திருப்புதல்வன் - கரும்பைப்போன்ற மொழியை உடைய
உமையம்மையாரின் திருமகன், அரன்மகன் - அரனார் திருமகன்,
கங்கைபெற்றருள் புத்திரன் -