பக்கம் எண் :

17

அருள் இருக்கும், விண்டுவின் களைபூண்டிருக்கும் இடந்தனில் மிக்கான
தயை இருக்கும் - திருமாலின் அருளைப் பெற்றிருக்கும் இடத்திலே பெருமை
மிக்க இரக்கம் இருக்கும், பத்தியுடன் இனிய தயை உள்ளவரிடந்தனில் பகர்
தருமம் மிக இருக்கும் - திருமாலிடம் அன்பும் இனிய இரக்கமும்
உள்ளவரிடத்திலே சிறப்பித்துக் கூறப்படும் ஈகை யென்னும் அறம் இருக்கும்,
பகர்தருமம் உள்ளவரிடந்தனில் சத்துரு பலாயனத் திறல் இருக்கும் -
கூறப்படும் ஈகையுள்ளவரிடத்திலே பகைவரை வெல்லும் வலிமை யிருக்கும்,
இசை வைத்து மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன் உயிர் சிறக்கும்
அன்றோ - புகழ் பெற்று உயர்ந்த வலிமை பெற்றவரிடத்திலே மிகுதியான
நிலைபெற்ற உயிர்கள் சிறப்புறும் அல்லவா?

     (அருஞ்சொற்கள்) விண்டு - திருமால். திருமாது - இலக்குமி.
பகர்தல் - சொல்லுதல்; விலை கூறுதலுக்கே பகர்தல் என்று பெயர்.
நாளடைவிற் சொல்லுதல் என்பதற்கும் வந்து விட்டது. தருமம் - அறம்;
இங்கே கொடுத்தலுக்கு மட்டும் வழங்கியது. பலாயனம் (வட) - வலிமை.
திறல் - வலிமை, மன்னுதல் - எப்போதும் நிலையாக இருத்தல்.

     (கருத்து) உண்மையாக நடப்பதாற் செல்வமும், செல்வத்தாலே
அருளும், அருளாலே ஈகையும், ஈகையாலே வெற்றியும், வெற்றியாலே
அரசும் உண்டாகும்.                                  (7)

      8. இவர்க்கு இவர் தெய்வம்

ஆதுலர்க் கன்னம் கொடுத்தவர்க ளேதெய்வம்;
     அன்பான மாணாக்கருக்
கரியகுரு வேதெய்வம் அஞ்சினோர்க் காபத்து
     அகற்றினோ னேதெய்வமாம்;

காதல்உறு கற்புடைய மங்கையர் தமக்கெலாம்
     கணவனே மிக்கதெய்வம்
காசினியில் மன்னுயிர் தமக்கெலாம் குடிமரபு
     காக்கும்மன் னவர்தெய்வமாம்