ஓதரியபிள்ளைகட்
கன்னை தந்தையர் தெய்வம்
உயர்சாதி மாந்தர்யார்க்கும்
உறவின்முறை யார்தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்
குற்றசிவ பக்தர்தெய்வம்
மா
தயையி னாற்சூர் தடிந்தருள் புரிந்ததால்
வானவர்க் குத்தெய்வம் நீ
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.) ஆதுலர்க்கு
அன்னம் கொடுத்தவர்களே தெய்வம் -
இரப்பவர்க்கு உணவு கொடுத்தவர்களே தெய்வம், அன்பான
மாணாக்கருக்கு அரிய குருவே தெய்வம் - அன்புடைய மாணவர்க்கு
அருமையான ஆசிரியரே தெய்வம் அஞ்சினோர்க்கு ஆபத்து
அகற்றினோனே தெய்வம் ஆம் - அச்சமுற்றவர்கட்கு அந்த அச்சத்தை
நீக்கியவனே தெய்வம் ஆவான், காதல் உறு கற்பு உடைய மங்கையர்
தமக்கெலாம் கணவனே மிக்க தெய்வம் - அன்பும் கற்பும் உடைய
மாதர்களெல்லோருக்கும் அவரவர்களுடைய கணவரே சிறந்த தெய்வம்,
காசினியில் மன்னுயிர் தமக்கெலாம் குடிமரபு காக்கும் மன்னவர் தெய்வம்
ஆம் - உலகில் நிலையான உயிர்களுக்கெல்லாம் அவர்களுடைய குடியை
வழிவழியாகக் காக்கும் அரசர்கள் தெய்வம், ஓத அரிய பிள்ளைகட்கு
அன்னை தந்தையர் தெய்வம் - சொல்லுதற்கு முடியாத (சிறப்புடைய)
சிறுவர்களுக்குத் தாயுந் தந்தையும் தெய்வம், உயர் சாதி மாந்தர் யார்க்கும்
உறவின் முறையார் தெய்வம் - உயர்குடி மக்களெல்லோருக்கும்
உறவினர்கள் தெய்வம், விசுவாசம் உள்ள பேர்க்கு உற்ற சிவபக்தர்
தெய்வம் - சிவபிரானிடம் அன்புடையவர்களுக்குச் சிவனாரடியவர்கள்
தெய்வம், மாதயையினால் சூர்தடிந்து அருள் புரிந்ததால் வானவர்க்கு நீ
தெய்வம் - வானவரிடம் கொண்டுள்ள பேரருளினாலேயே சூரனைப்
பிளந்து அருள் செய்ததால் வானவர்க்கு நீயே தெய்வம். |
|
|
|