பக்கம் எண் :

19

     (அருஞ்சொற்கள்) ஆதுலர் - (வட) பிச்சையெடுப்பவர்கள், தடிந்து -
பிளந்து. சூர் - சூரபதுமன்.

     (கருத்து) பிச்சை யெடுப்பவருக்கு உணவளிப்பவரும், மாணவர்கட்கு
ஆசிரியரும், அச்சமுற்றவர்களுக்கு அந்த அச்சத்தைப் போக்கினவரும்,
பெண்களுக்குக் கணவரும், குடிகளுக்கு மன்னவரும், மக்களுக்குப்
பெற்றோரும், மாந்தர்களுக்கு உறவினரும், சிவநெறியிற் செல்வோருக்குச்
சிவனடியாரும், வானவருக்கு முருகனும் தெய்வமாவர்.                                                    (8)

      9. இவர்க்கு இதில் நினைவு

ஞானநெறி யாளர்க்கு மோட்சத்தி லேநினைவு
     நல்லறிவு ளோர்தமக்கு
நாள்தோறும் தருமத்தி லேநினைவு மன்னர்க்
     கிராச்சியந் தன்னில்நினைவு

ஆனகா முகருக்கு மாதர்மே லேநினைவு
     அஞ்சாத் திருடருக்கிங்
கனுதினம் களவிலே நினைவுதன வணிகருக்
     காதாய மீதுநினைவு

தானமிகு குடியாள ருக்கெலாம் வேளாண்மை
     தனில் நினைவு கற்பவர்க்குத்
தருகல்வி மேல்நினைவு வேசியர்க் கினியபொருள்
     தருவோர்கள் மீதுநினைவு

மானபர னுக்குமரி யாதைமேல் நினைவெற்கு
     மாறாதுன் மீதுநினைவு
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) ஞானநெறியாளர்க்கு மோட்சத்திலே நினைவு - ஆன்ம
நெறியிலே செல்கின்றவர்களுக்கு வீடுபேற்றிலே எண்ணம், நல்
அறிவுளோர்க்கு நாள்தொறும் தருமத்திலே நினைவு - சிறந்த
அறிவாளிகளுக்கு எப்போதும் அறத்திலே எண்ணம், மன்னர்க்கு
இராச்சியந்தன்னில்