பக்கம் எண் :

20

நினைவு - அரசர்களுக்கு அரசியலிலே எண்ணம், ஆனகாமுகருக்கு
மாதர்மேலே நினைவு - காமம் கொண்டவர்களுக்குப் பெண்களின் மேலே
எண்ணம், அஞ்சாத திருடருக்கு இங்கு அனுதினம் களவிலே நினைவு -
அச்சமற்ற கள்ளர்களுக்கு இவ்வுலகிலே எப்போதும் திருடுவதிலேயே
எண்ணம், தனவணிகருக்கு ஆதாயம்மீது நினைவு - செல்வமுடைய
வணிகர்களுக்கு ஊதியத்திலே எண்ணம், தானம் மிகு குடியாளருக்கெலாம்
வேளாண்மைதனில் நினைவு - ஈகையிலே சிறந்த குடிகளுக்கெல்லாம்
பயிரிடுவதிலே எண்ணம், கற்பவர்க்குத் தரு கல்விமேல் நினைவு -
படிப்பவர்களுக்குத் தாங்கள் கற்கும் கல்வியின்மேல் எண்ணம், வேசியர்க்கு
இனிய பொருள் தருவோர்கள்மீது நினைவு - வேசைத் தொழில்
புரிவோர்களுக்கு மனமினிக்கப் பொருள் கொடுப்பவர்கள்மேல் எண்ணம்,
மானபரனுக்கு மரியாதை மேல் நினைவு - மானமுடையவனுக்குத்
தன்மதிப்பின் மேல் எண்ணம், ஏற்கு உன்மீது மாறாது நினைவு - எனக்கு
உன்மேல் எப்போதும் நீங்காத எண்ணம்.

     (விளக்கவுரை) மோட்சமென்பது உலகிலே உள்ள பொருள்கள் மேல்
தனக்குண்டாகும் ஆசையை விடுவதாகும். ‘அற்றது பற்று எனில் உற்றது வீடு.'
‘இம் மூன்றும் விட்டதே பேரின்ப வீடு' - என வருவன காண்க. மானபரன்
- மானத்தை யுடையவன்.

     (கருத்து) ஞானிகளுக்கு வீடு பேற்றிலும், அறிவாளிகளுக்கு
அறத்திலும், அரசர்களுக்கு அரசியலிலும், காமுகருக்குப் பெண்கள்
மீதும், கள்ளர்க்குக் களவிலும், வணிகருக்கு ஊதியத்திலும், குடிகளுக்கு
வேளாண்மையிலும், மாணவர்க்குக் கல்வி மீதும், வேசிகட்குப்
பொருளளிப்போரிடத்திலும், மானிக்கு மானத்திலும் ஒரே
நினைவாயிருக்கும்.                                 (9)