பக்கம் எண் :

21

        10. இவர்க்கு இது இல்லை

வேசைக்கு நிசமில்லை திருடனுக்கு குறவில்லை
     வேந்தர்க்கு நன்றியில்லை
மிடியர்க்கு விலைமாதர் மீதுவங் கணம்இலை
     மிலேச்சற்கு நிறையதில்லை

ஆசைக்கு வெட்கம்இலை ஞானியா னவனுக்குள்
     அகம்இல்லை மூர்க்கன்தனக்
கன்பில்லை காமிக்கு முறையில்லை குணம்இலோர்க்
     கழகில்லை சித்தசுத்தன்

பூசைக்கு நவில் அங்க சுத்தியிலை யாவும்உணர்
     புலவனுக் கயலோர்இலை
புல்லனுக் கென்றுமுசி தானுசிதம் இல்லைவரு
     புலையற்கி ரக்கமில்லை

மாசைத் தவிர்த்தமதி முகதெய்வ யானையொடு
     வள்ளிக் கிசைந்த அழகா
மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.


     (இ-ள்.)
மாசைத் தவிர்த்த மதிமுகம் தெய்வயானையொடு -
களங்கமில்லாத் திங்கள் போன்ற முகத்தையுடைய தெய்வயானையுடன்,
வள்ளிக்கு இசைந்த அழகா - வள்ளிக்கும் விருப்பமான அழகனே!,
மயிலேறி........குமரேசனே!, வேசைக்கு நிசமில்லை - வேசிக்கு
உண்மையிராது, திருடனுக்கு உறவு இல்லை - கள்வனுக்கு உறவினர் என
இல்லை, வேந்தர்க்கு நன்றியில்லை - அரசர்களுக்குத் (தமக்குத் துணை
புரிந்தோரிடம்) நன்றியறிதல் இராது, மிடியர்க்கு விலை மாதர்மீது வங்கணம்
இல்லை - வறியவருக்கு வேசியர்மேல் நட்புக் கிடையாது, மிலேச்சற்கு
நிறையது இல்லை - இழிந்தவருக்கு ஒழுக்கம் இல்லை; ஆசைக்கு வெட்கம்
இலை - அதிக விருப்பமுடையவனுக்கு நாணம் இல்லை , ஞானியானவனுக்கு
உள் அகம் இல்லை - அறிவாளிக்கு நான் என்னும் செருக்கும் இல்லை,
மூர்க்கன் தனக்கு அன்பு இல்லை -