கொடியவனுக்குப் பிறரிடம்
அன்பு இல்லை, காமிக்கு முறையில்லை -
காமத்தாலே அறிவு மயங்கியவனுக்கு முறை தெரியாது, குணம் இலோர்க்கு
அழகு இல்லை - நல்ல பண்பு இல்லாதவர்க்கு அழகினாலே பயன் இல்லை,
சித்த சுத்தன் பூசைக்கு நவில் அங்க சுத்தி இல்லை - மனத்திலே தூய்மை
யுடையவன் செய்யும் தெய்வம் வழிபாட்டுக்கு நூல்களிற் கூறப்படும் உடல்
தூய்மை செய்தல் வேண்டியதில்லை, யாவும் உணர் புலவனுக்கு அயலோன்
இலை - எல்லா நூல்களையும் அறிந்த அறிவாளிக்கு அயலார் யாரும் இலர்
(யாவரும் உறவினர்), புல்லனுக்கு என்றும் உசித அனுசிதம் இல்லை -
அற்பனுக்கு எப்போதும் தக்கதும் தகாததும் இல்லை, வருபுலையற்கு
இரக்கம் இல்லை - கொலைத் தொழிலைச் செய்து வரும் புலையனுக்கு
(உயிர்களிடம்)அருள் இல்லை.
(அருஞ்சொற்கள்)
மிடி
- வறுமை. உசிதம் x அநுசிதம். உசிதம் -
தகுதி. வங்கணம். நட்பு.
(கருத்து)
வேசைக்கு
உண்மையும், திருடனுக்கு உறவினரும்,
அரசர்களுக்கு நன்றியறிதலும் வறியவனுக்கு விலைமாதர் மீது நட்பும்,
இழிந்தவனுக்கு ஒழுக்கமும், ஆசைக்கு வெட்கமும், அறிஞனுக்குச்
செருக்கும், கொடியவனுக்கு அன்பும், காமுகனுக்கு முறையும்,
குணமில்லாதவனுக்கு அழகும், உளத்தூய்மை யுடையவனுக்கு உடல்
தூய்மையும், அறிஞனுக்கு உறவாகாதவரும், கயவனுக்கு நன்மை
தீமையும், புலையனுக்கு இரக்கமும் இல்லை. (10)
11.
இப்படிப்பட்டவர்
இவர்
ராயநெறி
தவறாமல் உலகபரி பாலனம்
நடத்துபவ னேயரசனாம்
ராசயோ சனைதெரிந் துறுதியா கியசெய்தி
நவிலுமவ னேமந்திரி,
நேயமுட னேதன்
சரீரத்தை எண்ணாத
நிர்வாகி யேசூரனாம்,
நிலைபெறு மிலக்கண மிலக்கிய மறிந்துசொலும்
நிபுணகவி யேகவிஞனாம்
|
|