பக்கம் எண் :

23

ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும்
     அறியும்மதி யோன்வைத்தியன்,
அகம்இன்றி மெய்யுணர்ந் தைம்புல னொழித்துவிட்
     டவனேமெய் ஞானியெனலாம்

மாயவர் சகோதரி மனோன்மணிக் கன்பான
     வரபுத்ர வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரே சனே.

     (இ-ள்.) மாயவர் சகோதரி மனோன்மணிக்கு அன்பான வரபுத்திர -
திருமாலின் தங்கையான உமையம்மைக்கு அன்புடைய நல்ல மகனே!,
வடிவேலவா - வடிவேலேந்திய கையனே!, மயிலேறி........குமரேசனே!, ராய
நெறி தவறாமல் உலகபரிபாலனம் நடத்துபவனே அரசனாம் - அரச நெறி
மாறாமல் உலகைக் காப்பாற்றுவோனே மன்னவ னாவான், இராச யோசனை
தெரிந்து உறுதியாகிய செய்தி நவிலுமவனே மந்திரி - அரசியல்
சூழ்ச்சியறிந்து நன்மைதரும் பொருளைக் கூறுவோனே அமைச்சன்,
நேயமுடனே தன் சரீரத்தை யெண்ணாத நிர்வாகியே சூரன் ஆம் - தன்
உடல்மேல் பற்று வைக்காத தலைவனே வீரனாவான், நிலைபெறும்
இலக்கணம் இலக்கியம் அறிந்து சொலும் நிபுண கவியே கவிஞன் ஆம் -
நிலையான இலக்கண இலக்கிய முறையறிந்து கூறும் வல்லமையுள்ள கவியே
கவியெனத் தக்கவன், ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும் அறியும்
முதியோன் வைத்தியன் - நன்மையைத் தரும் மருத்துவ நூல்களையும்
எழுவகைத் தாதுக்களின் நிலையையும் அறிந்த (அறிவால்) முதியவனே
மருத்துவன், அகமின்றி மெய் உணர்ந்து ஐம்புலன் ஒழித்து விட்டவனே
மெய்ஞ்ஞானி யெனலாம் - நானெனும் செருக்கின்றி உண்மையறிந்து ஐந்து
பொறிகளையும் அடக்கிவிட்டவனே உண்மை யறிஞன் எனப்படுவான்.

     (விளக்கவுரை) உறுதி - நன்மை. மந்திரம் கூறுவோன் - மந்திரி.
மந்திரம் - ஆராய்ச்சி. வீரனுக்குத் தன் மெய்யின்மேற்