12.
விரைந்து அடக்குக
அக்கினியை,
வாய்முந்து துர்ச்சனரை, வஞ்சமனை
யாளைவளர் பயிர்கொள்களையை,
அஞ்சா விரோதிகளை, அநியாயம் உடையோரை,
அகிர்த்தியப் பெண்களார்ப்பைக்,
கைக்கினிய
தொழிலாளி யைக்,கொண்ட அடிமையைக்
களவுசெய் யுந்திருடரைக்,
கருதிய விசாரத்தை, அடக்கம்இல் பலிசையைக்,
கடிதான கோபந்தனை,
மெய்க்கினி
தலாப்பிணியை, அவையுதா சீனத்தை,
வினைமூண் டிடுஞ்சண்டையை,
விடமேறு கோரத்தை யன்றடக் குவதலால்
மிஞ்சவிட லாகாதுகாண்
மைக்கினிய
கண்ணிகுற வள்ளிதெய் வானையை
மணம்செய்த பேரழகனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|