வாய்முந்து துர்ச்சனரை
- வாய்ப்பேச்சிலே முந்திவரும் தீயவரையும், வஞ்ச
மனையாளை - கெட்ட நினைவுடைய மனைவியையும், வளர்பயிர்கொள்
களையை - வளரும் பயிரிலே இருக்கும் களையையும், அஞ்சா விரோதிகளை
- அச்சமற்ற பகைவரையும், அநியாயம் உடையோரை - நன்னெறி
நில்லாதவரையும், அகிர்த்தியப் பெண்கள் ஆர்ப்பை - தீய தொழில்
செய்யும் பெண்களின் ஆரவாரத்தையும், கைக்கு இனிய தொழிலாளியை -
நல்ல கைத்தொழிலுடையவனையும், கொண்ட அடிமையை - பணங்கொடுத்து
வாங்கிய அடிமையையும், களவுசெய்யுந் திருடரை - திருடும் திருடரையும்,
கருதிய விசாரத்தை - உள்ளக் கவலையையும், அடக்கம் இல் பலிசையை -
அடங்கியிராத பருவப்பெண்ணையும், கடிதான கோபந்தனை - வெறுக்கத்தக்க
சினத்தையும், மெய்க்கு இனிது அலாப் பிணியை - உடலுக்கு நன்மை தராத
நோயையும், அவை உதாசீனத்தை - அவையிலுள்ளவர்கள் பழிப்பதையும்,
வினை மூண்டிடும் சண்டையை - கெடுதியை வளர்க்கும் போரையும், விடம்
ஏறு கோரத்தை - துடுக்குப்புரியும் குதிரையையும், அன்று அடக்குவதலால் -
அப்போதே அடக்குதல் இன்றி, மிஞ்சவிடலாகாது - மீறிப் போகவிடுதல்
தவறு.
(விளக்கவுரை)
இந்நூலாசிரியர்
காலத்தே அடிமை முறையுந்
தொழிலாளிகளை அடக்கியாளுஞ் செருக்குமுறையும் இருந்ததால் அவர்களை
மீறவிடலாகாதென்றார். அகிர்த்தியம் (வட) - தீயதொழில். கோரம் - குதிரை.
(கருத்து)
நெருப்பு
முதலாகக் கூறப்பட்டவற்றை அடக்காவிட்டாற்
கெடுதி வரும். (12)
13.
இவர்க்கு இது துரும்பு
தாராள மாகக்
கொடுக்குந் தியாகிகள்
தமக்குநற் பொருள் துரும்பு,
தன்னுயிரை யெண்ணாத சூரனுக் கெதிராளி
தளமெலாம் ஒருதுரும்பு,
|
|