பேரான பெரியருக்
கற்பரது கையினிற்
பிரயோச னந்துரும்பு,
பெரிதான மோட்சசிந் தனையுள் ளவர்க்கெலாம்
பெண்போகம் ஒருதுரும்பு,
தீராத சகலமும்
வெறுத்ததுற விக்குவிறல்
சேர்வேந்தன் ஒருதுரும்பு,
செய்யகலை நாமகள் கடாட்சமுள் ளோர்க்கெலாஞ்
செந்தமிழ்க் கவிதுரும்பாம்.
வாராரும்
மணிகொள்முலைவள்ளிதெய் வானையை
மணம்புணரும் வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|