செய்யகலை நாமகள்
கடாட்சமுள்ளோர்க்கெலாம் செந்தமிழ்க்கவி
துரும்புஆம் - நன்மை தருங் கலை வடிவமான நாமகளின் அருள்
பெற்றவர்கட்கெல்லாம் செந்தமிழிலே செய்யுள் செய்தல்
துரும்பெனலாகும்.
(விளக்கவுரை)
சூர் - அச்சம். சூரன் - அஞ்சத் தகுந்த தோற்றமும்
செயலும் உடையவன். வீரன் - அஞ்சாதவன். தன் உயிரைப்
பொருட்படுத்தாதவனை வீரனென்றே விளம்புதல் வேண்டும். தியாகி (வட)
- வள்ளல். தனக்கென ஒன்றையும் விரும்பாது மற்றோர்க்குத் துணைபுரியும்
பேரருளாளனே துறவி. அவனே வீடுபெற்றவன். பெண்களையும் இன்பந்தரும்
(அஃறிணைப்) பொருள் போலவே நினைக்கும் தவறான நெறிபற்றிப்
பெண்போகம் வீடு பேற்றிற்குத் தடையெனக் கூறிவிட்டார். ‘அறனெனப்
பட்டதே இல்வாழ்க்கை' என்னும் வள்ளுவர் கருத்தை நோக்கின்
இக்கொள்கை மிகப்பெருந் தவறானதென்று விளங்கும்.
(கருத்து)
வள்ளலுக்குப்
பொருளும், வீரனுக்குப் பகைவர் படையும்,
பெரியோருக்குச் சிறியோர் உதவியும், வீட்டை விரும்பினவனுக்குப்
பெண்ணின்பமும், பெருந்துறவிக்கு வேந்தனும், கலைமகளருள்
பெற்றவனுக்குச் செய்யுளியற்றலும் துரும்புபோல எண்ணத்
தக்கவையாகும். (13)
14.
இதனை விளக்குவது இது
பகல்விளக்
குவதிரவி, நிசிவிளக் குவதுமதி,
பார்விளக் குவதுமேகம்,
பதிவிளக் குவதுபெண், குடிவிளக் குவதரசு,
பரிவிளக் குவதுவேகம்,
இகல்விளக்
குவதுவலி, நிறைவிளக் குவதுநலம்,
இசைவிளக் குவதுசுதி, ஊர்
இடம்விளக் குவதுகுடி, உடல்விளக் குவதுண்டி
இனிய சொல் விளக்குவது அருள்,
புகழ்விளக்
குவதுகொடை, தவம்விளக் குவதறிவு,
பூவிளக் குவதுவாசம்,
பொருள்விளக் குவதுதிரு, முகம்விளக் குவதுநகை
புத்தியை விளக்குவது நூல்,
|
|