மகம்விளக்
குவதுமறை, சொல்விளக் குவதுநிசம்,
வாவியை விளக்குவதுநீர்,
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல் நீடு
மலைமேவு குமரேசனே. |
(இ-ள்.)
பகல் விளக்குவது இரவி-பகற் பொழுதை விளக்குவது
ஞாயிறு; நிசி விளக்குவது மதி - இரவை ஒளிசெய்வது திங்கள்; பார்
விளக்குவது மேகம் - நிலத்தைச் செழிப்பாக்குவது முகில்; பதி விளக்குவது
பெண் - கணவனை விளக்கமுறச் செய்பவள் பெண்ணாவாள்; குடி
விளக்குவது அரசு - குடிகளைத் தெளிவுறக் காப்பவன் அரசனாவான்; பரி
விளக்குவது வேகம் - குதிரைக்கு விளக்கந்தருவது அதனுடைய விரைவு;
இகல் விளக்குவது வலி - பகைமைக்கு விளக்கந் தருவது வலிமை; நிறை
விளக்குவது நலம் - ஒழுக்கம் விளக்குவது அழகு; இசை விளக்குவது சுதி
- இசைக்கு இனிமை தருவது சுருதியெனும் இசைக்கருவி; ஊர் இடம்
விளக்குவது குடி - ஊரை அழகுறச் செய்வது குடிவளம்; உடல் விளக்குவது
உண்டி - உடம்பை அழகு படுத்துவது உணவு; இனியசொல் விளக்குவது
அருள் - இனிய சொல்லால் ஒளிபெறுவது அருள்; புகழ் விளக்குவது
கொடை - புகழைப் பரப்புவது கொடுத்தலென்னும் பண்பு; தவம் விளக்குவது
அறிவு - தவத்தைச் சிறப்புறக் காண்பிப்பது அறிவு; பூவிளக்குவது வாசம் -
மலரை விளக்குவது மணம்; பொருள் விளக்குவது திரு - செல்வத்தை
எடுத்துக்காட்டுவது செல்வரின் அழகு; (செல்வத்தை விளக்கமுறச் செய்வது
திருமகளின் அருள் என்றுங் கூறலாம்.) முகம் விளக்குவது நகை -
முகத்தை அழகாக்குவது மகிழ்ச்சி; புத்தியை விளக்குவது நூல் - அறிவை
யுண்டாக்குவது நூலைக் கற்றல்; மகம் விளக்குவது மறை - வேள்வியை
ஒளிபெறச்செய்வது மறையோதுதல்: சொல் விளக்குவது நிசம் - சொல்லுக்கழகு
உண்மை; வாவியை விளக்குவது நீர் - பொய்கைக்கழகு நீர்நிறைவ. |
|
|
|