பக்கம் எண் :

29

     (கருத்து) ஞாயிறு இல்லாத பகலும், திங்களில்லாத இரவும்,
மழையில்லாத நிலமும், மனைவியில்லாத கணவனும், குடிகளில்லாத
ஆட்சியும், வேகமில்லாத குதிரையும், வலிமையில்லாத பகையும்,
ஒழுக்கமில்லாத அழகும், சுருதியில்லாத இசையும், குடிகளில்லாத ஊரும்,
உணவில்லாத உடம்பும், இன்சொலில்லாத அருளும், கொடையில்லாத
புகழும், அறிவில்லாத தவமும், மணமற்ற மலரும், செல்வமில்லாத அழகும்,
மகிழ்ச்சியற்ற முகமும், அறிவை விளக்காத நூலும், மறைவழி செய்யாத
வேள்வியும், உண்மையற்ற சொல்லும், நீரற்ற குளமும் விளக்கமுறாதன.
                                                   (14)

  15. பிறப்பினால் மட்டும் நன்மையில்லை

சிங்கார வனமதில் உதிப்பினும் காகமது
     தீஞ்சொல்புகல் குயிலாகுமோ ?
திரையெறியும் வாவியிற் பூத்தாலு மேகொட்டி
     செங்கஞ்ச மலராகுமோ?

அங்கான கத்திற் பிறந்தாலும் முயலான
     தானையின் கன்றாகுமோ?
ஆண்மையா கியநல்ல குடியிற் பிறந்தாலும்
     அசடர்பெரி யோராவரோ?

சங்காடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான்
     சாலக்கி ராமமாமோ?
தடம்மேவு கடல்நீரி லேயுப்பு விளையினும்
     சாரசர்க் கரையாகுமோ?

மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு பதேசம்
     வைத்தமெய்ஞ் ஞானகுருவே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு உபதேசம் வைத்த
மெய்ஞ்ஞான குருவே - மாசுபடராத தூயதமிழை, அகத்திய முனிவருக்குக்
கற்பித்த உண்மையாசிரியனே!, மயிலேறி...........குமரேசனே! காகமது சிங்கார