பக்கம் எண் :

31

       16. பலர்க்கும் பயன்படுவன

கொண்டல்பொழி மாரியும், உதாரசற் குணமுடைய
     கோவுமூ ருணியின் நீரும்
கூட்டமிடும் அம்பலத்து றுதருவின் நீழலும்,
     குடியாளர் விவசாயமும்,

கண்டவர்கள் எல்லாம் வரும்பெருஞ் சந்தியிற்
     கனிபல பழுத்தமரமும்,
கருணையுட னேவைத் திடுந்தணீர்ப் பந்தலும்
     காவேரி போலூற்றமும்,

விண்டலத்துறைசந்தி ராதித்த கிரணமும்,
     வீசும்மா ருதசீதமும்,
விவேகியெனும் நல்லோ ரிடத்திலுறு செல்வமும்
     வெகுசனர்க்கு பகாரமாம்,

வண்டிமிர் கடப்பமலர் மாலையணி செங்களப
     மார்பனே வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) வண்டு இமிர் கடப்ப மலர்மாலை அணி செங்களப மார்பனே
- வண்டுகள் முரலும் கடப்பந்தாரணிந்த சிவந்த கலவைச் சந்தனங்கமழும்
மார்பனே!, வடிவேலவா - வடிவேற் கையனே!, மயிலேறி.........குமரேசனே! -,
கொண்டல் பொழி மாரியும் - முகில் பெய்யும் மழையும், உதார சற்குணம்
உடைய கோவும் - வண்மையும் நற்பண்பும் உடைய அரசனும்; ஊருணியின்
நீரும் - ஊராருக்குப் பொதுவான நீர்நிலையிலுள்ள தண்ணீரும்; கூட்டமிடும்
அம்பலத்து உறுதருவின் நீழலும் - ஊர்ப் பொதுக்கூட்டங்கள் கூடும்
மேடையான மன்றிலே தழைத்த மரத்தின் நிழலும்; குடியாளர் விவசாயமும்
- குடிகள் இடும் பயிரும்; கண்டவர்கள் எல்லாம் வரும் பெருஞ்சந்தியிற்
பலகனி பழுத்த மரமும் - எல்லோரும்