பக்கம் எண் :

32

வரக்கூடிய பெரிய சந்திப்பான இடத்திலே பல பழங்களுடன் நிற்கும்
மரமும்; கருணையுடனே வைத்திடும் தண்ணீர்ப்பந்தலும் - அருளுடன்
அமைக்கப்பெற்ற தண்ணீர்ப்பந்தலும், காவேரிபோல் ஊற்றமும் - காவிரியைப்
போல வற்றாது சுரக்கும் நீரூற்றும், விண்தலத்து உறைசந்திர ஆதித்த
கிரணமும் - வானிலே உலவும் திங்கள் ஞாயிறுகளின் ஒளியும்; வீசும் மாருத
சீதமும் (சீத மாருதமும் என்று மாற்றுக) வீசுகின்ற குளிர்ந்த காற்றும்;
விவேகியெனும் நல்லோரிடத்தில் உறுசெல்வமும் - அறிவாளிகளான
நல்லவரிடத்திலே உண்டாயிருக்கும் செல்வமும்; வெகுசனர்க்கு உபகாரம்
ஆம் - பல மக்களுக்கு ஆதரவாகும்.

     (விளக்கவுரை) ஊருணி - ஊராரால் உண்ணப்படும் நீர்நிலை.
முற்காலத்திலே ஊருக்குப் பொதுவான இடத்திலே பெரிய மரத்தடியிலே
உள்ள மேடையே பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடம். சனர் (வட) -
மக்கள். விவேகி (வட) - அறிவாளி. விவேகி : ஒருமை; நல்லோர் : பன்மை.
ஆகையால், ‘விவேகியெனும் நல்லோர்' என்பது ஒருமை பன்மை மயக்கம்.
களபம் - கலவைச் சந்தனம். குங்குமப்பூ கலப்பதாற் ‘செங்களபம்' ஆயிற்று.

     (கருத்து) முகில்பொழியும் மழையும் அதனுடன் கூறப்பெற்ற
மற்றவைகளும் எல்லோருக்கும் பயன்படுவன.                (16)

17. தாம் அழியினும் தம் பண்பு அழியாதவை

தங்கம்ஆ னது தழலில் நின்றுருகி மறுகினும்
     தன் ஒளி மழுங்கிடாது,
சந்தனக் குறடுதான் மெலிந்துதேய்ந் தாலுமே
     தன் மணம் குன்றிடாது,

பொங்கமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமே
     பொலிவெண்மை குறைவுறாது,
போதவே காய்ந்துநன் பால்குறுகி னாலும்
     பொருந்துசுவை போய்விடாது,