பக்கம் எண் :

34

பொலிவு - அழகு. போத - மிக. துங்கம் - உயர்ச்சி. தொன்மை - பழைமை.
மடிந்தாலும் - இறக்கநேர்ந்தாலும்; ‘இறந்தாலும் பொய்தன்னைச்
சொல்லவேண்டாம்' என்பதுபோல. சுரர் - வானவர்.

     (கருத்து) பொன்னும் சந்தனக்கட்டையும் சங்கும் பாலும் மணியும்
துன்புற்றாலும் தம் பண்பு மாறாததுபோலப் பெரியோர்கள் இறக்க
நேர்ந்தாலும் ஒழுக்கந் தவறார்.                      (17)

         18. நரகில் வீழ்வோர்

மன்னரைச் சமரில்விட் டோடினவர், குருமொழி
     மறந்தவர், கொலைப்பாதகர்
மாதா பிதாவைநிந் தித்தவர்கள் பரதாரம்
     மருவித் திரிந்தபேர்கள்

அன்னம் கொடுத்தபே ருக்கழிவை யெண்ணினோர்
     அரசடக்கிய அமைச்சர்
ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர்
     அருந்தவர் தமைப்பழித்தோர்

முன்னுதவி யாய்ச்செய்த நன்றியை மறந்தவர்
     முகத்துதி வழக்குரைப்போர்
முற்றுசிவ பத்தரை நடுங்கச்சி னந்தவர்கள்
     முழுதும்பொய் உரைசொல்லுவோர்

மன்னொருவர் வைத்தபொருள் அபகரித்தோர் இவர்கள்
     மாநரகில் வீழ்வரன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல் நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மயிலேறி........குமரேசனே! -, மன்னரைச் சமரில்விட்டு
ஓடினவர் - அரசர்களைப் போரிலே கைவிட்டு ஓடிய கோழைகளும்,
குருமொழி மறந்தவர் - ஆசிரியர் ஆணையை மறந்தவர்களும், கொலைப்பா
தகர் - கொலை செய்த பாவிகளும், மாதா பிதாவை நிந்தித்தவர்கள் -
பெற்றோரைப் பழித்தவர்களும், பரதாரம் மருவித் திரிந்த பேர்கள் -