பக்கம் எண் :

35

அயலார் மனைவிகளைக் கலந்து திரிகின்றவர்களும், அன்னம் கொடுத்த
பேருக்கு அழிவை எண்ணினோர் - உணவளித்தவர்கட்குக் கெடுதி
நினைத்தவர்களும், அரசு அடக்கிய அமைச்சர் - அரசர்களை அழித்த
மந்திரிகளும், ஆலயம் இகழ்ந்தவர்கள் - இறைவர் திருக்கோயிலைப்
பழித்தவர்களும், விசுவாச காதகர் - நட்பைக் கெஇடுத்தவர்களும், அருந்தவர்
தமைப் பழித்தோர் - உயர்ந்த துறவிகளை இகழ்ந்தவர்களும், முன்
உதவியாய்ச் செய்த நன்றியை மறந்தவர் - துன்பமுற்ற காலத்திலே
துணைபுரிந்த நன்றியை மறந்து விட்டவர்களும், முகத்துதி வழக்குரைப்போர்
- தம்மைப் புகழ்ந்து கூறுவோர் சார்பாக (ஓரவஞ்சகமாக) வழக்குக்
கூறுகின்றவர்களும், முற்று சிவபத்தரை நடுங்கச் சினந்தவர்கள் - முதிர்ந்த
சிவனாடியவரை மனம் கலங்கக் கோபித்தவர்களும், முழுதும் பொய் உரை
சொல்லுவோர் - முழுப்பொய் கூறுவோர்களும் மன் ஒருவர் வைத்த பொருள்
அபகரித்தோர் - (தம்மிடம்) நிலையாக ஒருவர் வைத்த பொருளைக்
கவர்ந்தவர்களும், இவர்கள் மாநரகில் வீழ்வர் அன்றோ - ஆகிய இவர்கள்
கொடிய நரகில் வீழ்வார்கள் அல்லவா?

     (கருத்து) அரசரைப் போர்க்களத்தில் விட்டு ஓடினவர்கள் முதலாகக்
கூறப்பட்ட இவர்கள் நரகத்தை இருப்பிடமாகக் கொள்வார்கள்.                                                 (18)

          19. உடல்நலம்

மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது,
     மறுவறு விரோசனந்தான்
வருடத் திரண்டுவிசை தைலம் தலைக்கிடுதல்
     வாரத் திரண்டுவிசையாம்

மூதறிவி னொடுதனது வயதினுக் கிளையவொரு
     மொய்குழ லுடன்சையோகம்
முற்று தயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்
     முதிரா வழுக்கையிள நீர்