பக்கம் எண் :

36

சாதத்தில் எவளாவா னாலும்பு சித்தபின்
     தாகந் தனக்குவாங்கல்
தயையாக உண்டபின் உலாவல்லிவை மேலவர்
     சரீரசுகம் ஆமென்பர்காண்

மாதவகு மாரிசா ரங்கத்து தித்தகுற
     வள்ளிக்கு கந்தசரசா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மாதவகுமாரி சாரங்கத்து உதித்த குறவள்ளிக்கு உகந்த
சரசா - பெருந்தவம்புரிந்த மங்கையும் மான் வயிற்றிலே பிறந்தவளுமான
வேடர்குல வள்ளியம்மையின் மனத்திற்கிசைந்த இனிய மணவாளனே!,
மயிலேறி..........குமரேசனே!-, மாதத்து இரண்டுவிசை மாதரைப் புல்குவது -
திங்களுக்கு இருமுறை பெண்களைக் கூடுவது, மறுஅறு விரோசனந்தான்
வருடத்து இரண்டு விசை - குற்றமற்ற வயிற்றுக்கழிவு மருந்து ஆண்டுக்கு
இருமுறை, தைலம் தலைக்குஇடுதல் வாரத்து இரண்டுவிசை ஆம் -
எண்ணெய் தலையில் தேய்த்து முழுகுவது வாரத்துக்கு இருமுறை,
மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்குழலுடன் சையோகம்
- பேரறிவு கொண்டு தன் வயதினும் இளைய அடர்த்தியான கூந்தலையுடைய
ஒரு பெண்ணுடன் சேர்க்கை, முற்று தயிர் - முதிர்ந்த தயிர், காய்ச்சு பால் -
காய்ச்சிய பால், நீர்மோர் - நீர்மிகுந்த மோர், உருக்குநெய் - உருக்கிய நெய்,
முதிரா வழுக்கை இளநீர் - முற்றாத வழுக்கையை உடைய இளநீர், சாதத்தில்
எவ்வளவு ஆனாலும் புசித்தபின் தாகம் தனக்கு வாங்கல் - எவ்வளவு
உணவானாலும் உண்டபிறகே நீர் பருகுதல், தயையாக உண்டபின் உலாவல்
- (உடம்பின் மேல்) இரக்கம்வைத்து உண்டபிறகு உலாவுதல், இவை -
இவற்றை, மேலவர் சரீரசுகம் ஆம் என்பர் - பெரியோர் உடல்நலந்
தருபவையாகும் என்று கூறுவர்.