பக்கம் எண் :

38

     (இ-ள்.) வாசவனும் உம்பர் அனைவரும் வந்து விசய சய என்று
தொழுது ஏத்து சரணா - இந்திரனும் பிற வானவரும் திருமுன் வந்து,
‘வெல்க! வெல்க' என்று வணங்கித் துதிக்குந் திருவடிகளை இயுடையவனே!,
மயிலேறி.........குமரேசனே!, - தேசுபெறு மேரு பிரதட்சணம் செய்தும் மதி
தேகவடு நீங்கவில்லை - ஒளிவீசும் மேருமலையை வலமாக வந்தும்
திங்களின் மெய்யிலுள்ள களங்கம் ஒழியவில்லை; திருமால் உறங்கிடும்
சேடனுக்கு உவணன் செறும்பகை ஒழிந்ததில்லை - திருமால் துயிலப்
படுக்கையாக இருக்கும் ஆதிசேடன் என்னும் பாம்புக்கும் தன்குலப்
பகையான கருடனின் பகைமை நீங்கவில்லை; ஈசன் கழுத்திலுறு
பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும் - சிவபிரான் கழுத்திலே
பணியாக இருக்கும் பாம்புக்குக் காற்றையன்றி வேறு உணவு இல்லை;
இனிய கண் ஆகிவரு பரிதியானவனுக்கு இராகுவோ கனவிரோதி -
சிவபிரானுக்கு இனிய வலக்கண்ணாகிய கதிரவனுக்கு அற்பனான இராகுவே
பெரும்பகைவன்; ஆசுஇலாப் பெரியோரிடத்தினில் அடுக்கினும் அமைத்தபடி
அன்றி வருமோ - குற்றமற்ற பெரியோரைப் புகலாக அடைந்தாலும் ஊழாக
அமைத்தவாறே அன்றி வேறு வருமோ?, அவரவர்கள் அனுபோகம்
அனுபவித்திடல் வேண்டும் அல்லால் எவரை வெறுப்பது - அவரவருடைய
பயனை அவரவர்களே நுகர்தல்வேண்டும் அல்லாமல் யாரையும் வெறுத்தல்
கூடாது.

     (விளக்கவுரை) வசு - பொன். வாசவன் - பொன்னுலகத் தலைவன்.
உம்பர் - மேலிடம். அஃது அங்குள்ளோரை உணர்த்துகிறது;
(இடவாகுபெயர்). மேருமலையைக் கதிரவனுந் திங்களும் பிற கோள்களும்
வலம்வருவதாகப் புராணங்கள் கூறும். ஆதிசேடன் என்னும் பாம்பு
திருமாலுக்குத் துயிலும் அணையாக உள்ளது என்றும் புராணங்கள் கூறும்.

     இராகு என்னும் பாம்பு கதிரவனைப் பகைத்த கதை:-

     பாற்கடலிலிருந்து அமுதம் வந்தது. அதைக் கடைந்த அவுணரும்
அமரரும் பங்குபெற விரும்பிச் சூழ்ந்தனர். அவுணர்களுக்குக் கொடாமல்
அமரருக்கு மட்டும் அமுதத்தை அளிக்கத் திருமால் விரும்பினார்;
மனத்தை மயங்கி மோகிக்கச் செய்யும்