பக்கம் எண் :

40

     (இ-ள்.) மயிலேறி.......குமரேசனே!-, குரு இலாவித்தை - ஆசிரியன்
கற்பியாத கல்வி, கூர் அறிவு இலா வாணிபம் - நுண்ணறிவு இல்லாத
வணிகத் தொழில், குணம் இலா மனைவி ஆசை - நற்பண்பு இல்லாத
மனைவியின் காதல், குடிநலம் இலா நாடு - குடிகளுக்கு நன்மையில்லாத
நாடு, நீதி இல்லா அரசு - அறமில்லாத வேந்தன் ஆட்சி, குஞ்சரம் இலாத
வெம்போர் - யானைப் படையில்லாத கொடிய போர், திருஇலா மெய்த்திறமை
- செல்வமில்லாத உடல்வலிமை, பொறைஇலா மாதவம் - பொறுமையில்லாத
சிறந்த தவம், தியானம் இல்லாத நிட்டை - (கடவுளை) நினைவில் கொள்ளாத
யோகம், தீபம் இலாத மனை - விளக்குஇல்லாத வீடு, சோதரம் இலாத உடல்
- உடன்பிறப்பு இல்லாத உடம்பு, சேகரம் இலாத சென்னி - முடியணியாத
தலை, உருஇலா வளமை மெய் - அழகின்றிப் பருத்த உடம்பு, பசிஇலா
உண்டி - பசித்து உண்ணாத உணவு, புகல் உண்மை இல்லாத வசனம் -
புகழ்ந்து கூறத்தகும் மெய்ம்மையில்லாத பேச்சு, யோசனை இலா மந்த்ரி -
ஆராய்ச்சியற்ற அமைச்சு; தைரியம் இலா வீரம் - துணிவு இல்லாத வீரம்,
உதவி இல்லாத நட்பு - துணை செய்யாத நட்பு; மருஇலா வண்ணம் மலர் -
மணமில்லாத அழகிய மலர், பெரியோர் இலாத சபை - பெரியோர்கள்
இல்லாத சபை, (ஆகிய இவைகள்), வையத்து இருந்து என்பயன் - உலகில்
இருந்து என்ன நன்மை?

     (கருத்து) குருவிலாத கல்வி முதலானவை உலகில் இருந்தும் சிறப்புப்
பெறாதவை.                                               (21)

           22. ஆகாப்பகை

அரசர்பகை யும்தவம் புரிதபோ தனர்பகையும்
     அரியகரு ணீகர்பகையும்
அடுத்துக் கெடுப்போர் கொடும்பகையும் உள்பகையும்
     அருளிலாக் கொலைஞர்பகையும்