விரகுமிகும்
ஊரிலுள் ளோருடன் பகையுமிகு
விகடப்ர சங்கிபகையும்
வெகுசனப் பகையும்மந் திரவாதி யின்பகையும்
விழைமருத் துவர்கள் பகையும்
உரமருவு கவிவாணர்
பகையும்ஆ சான்பகையும்
உறவின்முறை யார்கள்பகையும்
உற்றதிர வியமுளோர் பகையுமந் திரிபகையும்
ஒருசிறிதும் ஆகாதுகாண்
வரநதியின்
மதலையென இனியசர வணமிசையில்
வருதருண சிறுகுழவியே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
வரநதியின்
மதலையென இனிய சரவணமிசையில் வருதருண
சிறுகுழவியே - உயர்ந்த கங்கையின் மகனென அழகிய சரவணத்தின்
மீதிலே எழுந்தருளிய சிறுகுழந்தையே!, மயிலேறி.......... குமரேசனே!-, அரசர்
பகையும் - மன்னர் பகையும், தவம்புரி தபோதனர் பகையும் - தவஞ்செய்யுந்
துறவிகள் பகைமையும், அரிய கருணீகர் பகையும் - அருமையான கணக்கர்
பகையும், அடுத்துக் கெடுப்போர் கொடும் பகையும் - அடுத்துக் கெடுக்கும்
கொடியவரின் பகையும், உள் பகையும் - உள்ளேயிருக்கும் பகையும்,
அருளிலாக் கொலைஞர் பகையும் - அருளில்லாத கொலையாளிகளின்
பகைமையும், விரகுமிகும் ஊரில் உள்ளோருடன் பகையும் - அன்புமிக்க
ஊராருடன் பகையும், மிகு விகடப்ரசங்கி பகையும் - பெரிய
நகைமொழியாளன் பகையும், வெகுசனப்பகையும் - கூட்டமான மக்களின்
பகையும், மந்திரவாதியின் பகையும் - மந்திரக்காரன் பகையும், விழை
மருத்துவர்கள் பகையும் - விரும்பத்தக்க வைத்தியர்களின் பகையும்,
உரம்மருவு கவிவாணர் பகையும் - அறிவிற்சிறந்த கவிஞரின் பகையும்,
ஆசான் பகையும் - ஆசிரியன் பகையும், உறவின் முறையார்கள் பகையும் -
|