பக்கம் எண் :

42

சுற்றத்தார் பகையும், உற்றதிரவியம் உளோர் பகையும் - செல்வர்களின்
பகையும், மந்திரி பகையும் - அமைச்சரின் பகையும், ஒருசிறிதும் ஆகாது -
சற்றும் கூடாது.

     (அருஞ்சொற்கள்) வரநதி - கங்கை. விரகு - அன்பு; வஞ்சகமும்
ஆம். உரம் - அறிவு. விகடப்ரசங்கி (வட) - நகைச்சுவைப் பேச்சாளன்.

     (கருத்து) அரசர் முதலாக இங்குக் கூறப்பட்டோர் பகைமை
தீமையை விளைவிக்கும். ஏற்றவகையில் அவற்றை நீக்கிக் கொள்ளல் நலம்.
                                                    (22)

         23. வசையுறும் பேய்

கடன்உதவு வோர்வந்து கேட்கும்வே ளையில்முகம்
     கடுகடுக் கின்றபேயும்
கனம்மருவு பெரியதனம் வந்தவுடன் இறுமாந்து
     கண்விழிக் காதபேயும்

அடைவுடன் சத்துருவின் பேச்சைவிசு வாசித்
     தகப்பட்டுழன் றபேயும்
ஆசைமனை யாளுக்கு நேசமாய் உண்மைமொழி
     யானதை உரைத்தபேயும்

இடரிலா நல்லோர்கள் பெரியோர்க ளைச்சற்றும்
     எண்ணாது உரைத்தபேயும்
இனியபரி தானத்தில் ஆசைகொண் டொருவற்
     கிடுக்கண்செய் திட்டபேயும்

மடமனை யிருக்கப் பரத்தையைப் புணர்பேயும்
     வசைபெற்ற பேய்கள் அன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மயிலேறி..............குமரேசனே! -, கடன் உதவு பேர்வந்து
கேட்கும் வேளையில் முகம் கடுகடுக்கின்ற