அருந்ததி, கதித்திடு
பெலத்தில் மாருதம் - மோதி வரும் ஆற்றலிலே காற்று,
யானையிற் பேசில் ஐராவதம் - யானைகளிற் சிறப்பித்துக் கூறும் ஐராவதம்,
தமிழினில் அகத்தியம் - தமிழ் நூல்களில் அகத்தியம், மந்திரத்திற் பிரணவம்
- மந்திரங்களிலே பிரணவம், வாரிதியிலே திருப்பாற்கடல் - கடல்களிலே
பாற்கடல், குவட்டினில் மாமேரு - மலைகளில் மாமேரு மலை, ஆகும்
அன்றோ - சிறப்புடையன ஆகும் அல்லவா?
(விளக்கவுரை)
காமதேனு
(வட): விரும்பியவற்றை அளிக்கும் பசு.
இஃது இந்திரனுடையது. அம்போருகம் (வட) - தாமரை, (நீரில் தோன்றுவது)
அம்பு - நீர். அகத்தியம் தமிழிலே முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்
பெறும் முத்தமிழிலக்கணம்.
(கருத்து)
இங்குக்
கூறப்பட்ட உயர்திணைப் பொருளும் அஃறிணைப்
பொருளும் அவ்வவ்வினத்தில் உயர்ந்தவை. (24)
25.
வலிமை
அந்தணர்க்
குயர்வேத மேபலம் கொற்றவர்க்
கரியசௌ ரியமேபலம்
ஆனவணி கர்க்குநிதி யேபலம் வேளாளர்க்
காயின்ஏ ருழவேபலம்
மந்திரிக்
குச்சதுர் உபாயமே பலம்நீதி
மானுக்கு நடுவேபலம்
மாதவர்க் குத்தவசு பலம்மடவி யர்க்குநிறை
மானம்மிகு கற்பேபலம்
தந்திரம்
மிகுத்தகன சேவகர் தமக்கெலாம்
சாமிகா ரியமேபலம்
சான்றவர்க் குப்பொறுமை யேபலம் புலவோர்
தமக்குநிறை கல்விபலமாம்
வந்தனை
செயும்பூசை செய்பவர்க் கன்புபலம்
வாலவடி வானவேலா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
|