(இ-ள்.) வாலவடிவான
வேலா - என்றும் இளைஞனான வேலனே!
மயிலேறி..........குமரேசனே!-, அந்தணர்க்கு உயர்வேதமே பலம் -
மறையவர்களுக்கு மேன்மையுடைய மறையே வலிமை; கொற்றவர்க்கு அரிய
சௌரியமே பலம் - வெற்றியுடைய அரசர்கட்கு அருமையான வீரமே
வலிமை; ஆன வணிகர்க்கு நிதியே பலம் - ஆக்கந்தேடும் வணிகர்களுக்குப்
பொருளே வலிமை; வேளாளர்க்கு ஆயின் ஏர் உழவே பலம் - ஆராய்ந்தால்
வேளாண்மை புரிவோர்க்கு உழவுக்குரிய ஏரே வலிமை; மந்திரிக்குச் சதுர்
உபாயமே பலம் - அமைச்சனுக்கு நால்வகைச் சூழ்ச்சிகளே வலிமை;
நீதிமானுக்கு நடுவே பலம் - அறத்தலைவனுக்கு நடுநிலையில் நிற்பதே
வலிமை; மாதவர்க்குத் தவசு பலம் - பெரிய தவத்தினர்க்குத் தவமே
வலிமை; மடவியர்க்கு நிறை மானமிகு கற்பே பலம் - பெண்களுக்கு
ஒழுக்கத்திலே நிற்றலாகிய பெருமை மிக்க கற்பே வலிமை; தந்திரம் மிகுத்த
கன சேவகர் தமக்கெலாம் சாமி காரியமே பலம் - சூழ்ச்சியிற் சிறந்த
பெருமைமிக்க சேவகர்களுக்குத் தம் தலைவனுடைய அலுவலை முடிப்பதே
வலிமை; சான்றவர்க்குப் பொறுமையே பலம் - பெரியோர்களுக்குப்
பொறுமையே வலிமை; புலவோர் தமக்கு நிறைகல்வி பலமாம் -
புலவர்களுக்கு நிறைந்த கல்வியே வலிமை; வந்தனை செய்யும் பூசை
செய்பவர்க்கு அன்பு பலம் - வணக்கம் புரியும் வழி பாட்டாளர்க்கு அன்பே
வலிமை.
(கருத்து)
இங்குக் கூறப்பட்டவர்கள் தமக்கு வலிமையெனக்
கூறப்பட்ட அவற்றையே கைக்கொள்க. (25)
26.
இருந்தும் பயனில்லை
தருணத்தில்
உதவிசெய் யாதநட் பாளர்பின்
தந்தென தராமல்என்ன
தராதரம் அறிந்துமுறை செய்யாத மன்னரைச்
சார்ந்தென்ன நீங்கிலென்ன
|
|