பெருமையுடன்
ஆண்மையில் லாதஒரு பிள்ளையைப்
பெற்றென பெறாமலென்ன
பிரியமாய் உள்ளன்பி லாதவர்கள் நேசம்
பிடித்தென விடுக்கில்என்ன
தெருளாக
மானம்இல் லாதவொரு சீவனம்
செய்தென செயாமல் என்ன
தேகியென வருபவர்க் கீயாத செல்வம்
சிறந்தென முறிந்தும் என்ன
மருவிளமை
தன்னிலில் லாதகன் னிகைபின்பு
வந்தென வராமலென்ன
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|