பக்கம் எண் :

48

என முறிந்தும் என்ன - பிச்சையென்று வருகின்றவர்களுக்குக் கொடாத
செல்வம் சிறப்புற்றால் என்ன பயன் அழிந்தால் என்ன கெடுதல்?, மருவு
இளமை தன்னில் இல்லாத கன்னிகை பின்பு வந்து என வராமல் என்ன -
சேர்க்கையை விரும்பும் இளமைப் பருவத்திலே கிடையாத பெண்
முதுமையிலே கிடைத்துப் பயன் என்ன கிடையாமற்போனால் என்ன கெடுதி?

     (கருத்து) நண்பர்கள் காலத்திலே துணைபுரிதல் வேண்டும். அரசர்கள்
தரமறிந்து முறைவழங்கல் வேண்டும். பெருமையும் ஆண்மையும் பிள்ளைகட்கு
வேண்டும். உள்ளன்புடையோர் நட்புவேண்டும். அறிவுடனும் மானத்துடனும்
வாழவேண்டும். ஐயமிட்டு வாழவேண்டும். இளமையிலே மணம்புரிதல்
வேண்டும்.                                  (26)

           27. பயன் என்ன?

கடல்நீர் மிகுந்தென்ன ஒதிதான் பருத்தென்ன
     காட்டிலவு மலரில்என்ன
கருவேல் பழுத்தென்ன நாய்ப்பால் சுரந்தென்ன
     கானில்மழை பெய்தும்என்ன

அடர்கழுதை லத்திநிலம் எல்லாம் குவிந் தென்ன
     அரியகுணம் இல்லாதபெண்
அழகாய் இருந்தென்ன ஆஸ்தான கோழைபல
     அரியநூல் ஓதியென்ன

திடம்இனிய பூதம்வெகு பொன்காத் திருந்தென்ன
     திறல்மிகும் கரடிமயிர்தான்
செறிவாகி நீண்டென்ன வஸ்த்ரபூ டணமெலாம்
     சித்திரத் துற்றும் என்ன

மடமிகுந் தெவருக்கும் உபகாரம் இல்லாத
     வம்பர்வாழ் வுக்குநிகராம்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.