(இ-ள்.)
மயிலேறி...........குமரேசனே!,
கடல் நீர் மிகுந்து என்ன -
கடலிலே மிகுதியான நீர் இருந்து பயன் என்ன? ஒதிதான் பருத்து என்ன -
ஒதியமரம் பருத்திருந்து பயன் என்ன?, காட்டு இலவு மலரில் என்ன -
காட்டிலவு மலர்ந்தால் பயன் என்ன?, கருவேல் பழுத்து என்ன -
கருவேலமரம் பழுத்துப் பயன் என்ன?, நாய்ப்பால் சுரந்து என்ன -
நாய்க்குப் பால் சுரந்தால் பயன் என்ன?, கானில் மழைபெய்தும் என்ன -
காட்டிலே பெய்த மழையால் யாருக்குப் பயன்?, அடர்கழுதை லத்திநிலம்
எல்லாம் குவிந்து என்ன - மிகுதியாகக் கழுதைச் சாணம் நிலமுழுதும்
குவிந்தாலும் பயன் என்ன?, அரிய குணம் இல்லாத பெண் அழகாய்
இருந்து என்ன? - நற்பண்பிலாத நங்கை அழகாயிருந்தாற் பயனுண்டோ?,
ஆஸ்தான கோழை பல அரியநூல் ஓதி என்ன - அவையிலே பேச
அஞ்சுங் கோழை அருமையான பல கலைகளைக் கற்றும் பயனேது?,
திடமினிய பூதம் வெகுபொன் காத்திருந்து என்ன - பேராற்றலுடைய பூதம்
மிக்க செல்வத்தைக் காத்திருந்தாலும் அதனால் பயனடையுமோ?
திறல்மிகும் கரடிமயிர்தான் செறிவாகி நீண்டு என்ன? - வலிமைமிக்க
கரடிக்கு அடர்த்தியான நீண்ட மயிரிருப்பதால் ஏது பயன்?,
வஸ்த்ரபூடணமெல்லாம் சித்திரத்து உற்றும் என்ன - ஆடையும் அணியும்
ஓவியத்திற் கிருந்தால் ஏது பயன்?, மடம்மிகுந்து எவருக்கும் உபகாரம்
இல்லாத வம்பர் வாழ்வுக்கு நிகராம் - அறிவின்றி, மற்றோருக்குப்
பயன்படாத வீணரின் வாழ்வுக்குச் சமமாம்.
(கருத்து)
பண்பிலாப்
பெண்ணின் அழகும் அவைக்கஞ்சுவோரின்
கல்வியும் மற்றோர்க்குப் பயன்படாத பேதையரின் செல்வத்திற்குச் சமம்.
(27)
28.
மக்கட்பதர்
தன்பெருமை
சொல்லியே தன்னைப் புகழ்ந்தபதர்
சமர்கண் டொளிக்கும்பதர்
தக்கபெரி யோர்புத்தி கேளாத பதர்தோழர்
தம்மொடு சலிக்கும் பதர்
|
|