பழிக்கும் பதரும்,
தன்மனைவி புணர்தல் வெளியாக்கும் பதர் - தன்
மனைவியின் சேர்க்கையைக் கூறும் பதரும், மன்புணரும் வேசையுடன்
விபசரிக்கின்ற பதர் - அரசனைச் சேரும் வேசையுடன் கூடுகின்ற பதரும்,
மனிதரில் பதர் என்பர் - மக்கட் பதர் எனப்படுவர்.
(விளக்கவுரை)
பெண்புத்தி
கேட்டல் தவறு என்பது பொருந்தாமை
23 ஆம் பாட்டினுரையிற் காண்க.
(கருத்து)
தற்பெருமை
கூடாது. போருக்கு அஞ்சலாகாது. சான்றோர்
அறிவுரையை ஏற்று நடத்தல்வேண்டும். தோழனோடும் ஏழைமை
பேசலாகாது. புறங்கூறலாகாது. பெற்றோரை ஆதரித்தல் வேண்டும். பிறரை
இரந்து வாழ்தல் கூடாது. பொய்ச்சான்று புகலக்கூடாது. மற்றவரைப்
பழிக்கத்தகாது. தன் மனைவியிடம் பெற்ற இன்பத்தை மற்றோரிடம்
உரைத்தல் அழகன்று. அரசனுடைய வேசையிடம் சேர்க்கை கொள்ளுதல்
உயிருக்குக் கேடு. (28)
29.
காணாத துறை
இரவிகா
ணாவனசம் மாரிகா ணாதபயிர்
இந்துகா ணாதகுமுதம்
ஏந்தல்கா ணாநாடு கரைகள்கா ணாஓடம்
இன்சொல்கா ணாவிருந்து
சுரபிகா
ணாதகன் றன்னைகா ணாமதலை
சோலைகா ணாதவண்டு
தோழர்கா ணாநேயர் கலைகள்கா ணாதமான்
சோடுகா ணாதபேடு
குரவர்கா
ணாதசபை தியாகிகா ணாவறிஞர்
கொழுநர்கா ணாதபெண்கள்
கொண்டல்கா ணாதமயில் சிறுவர்கா ணாவாழ்வு
கோடைகா ணாதகுயில் கள்
வரவுகா
ணாதசெலவு இவையெலாம் புவிமீதில்
வாழ்வுகா ணாஇளமையாம்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
|