(இ-ள்.)
மயிலேறி.........குமரேசனே!
-, இரவி காணா வனசம் -
கதிரவனைக் காணாத தாமரைமலர், மாரி காணாதபயிர் - மழையறியாப்
பயிர், இந்து காணாத குமுதம் - திங்களைப் பாராதஅல்லி, ஏந்தல் காணா
நாடு - அரசனில்லாத நாடு, கரைகள் காணா ஓடம் - கரைதெரியாப் படகு,
இன்சொல் காணா விருந்து - இன்மொழியற்ற விருந்து, சுரபி காணாத கன்று
- பசுவைக் காணாத கன்று, அன்னை காணா மதலை - தாயையறியாத சேய்,
சோலை காணாத வண்டு - மலர்க்காவை அடையாத வண்டு, தோழர் காணா
நேயர் - நண்பரைப் பிரிந்தவர், கலைகள் காணாத மான் - ஆணைக்
காணாத பெண்மான், சோடு காணாதபேடு - தன் - இணையைக் காணாத
பெட்டை, குரவர் காணாத சபை - பெரியோரில்லாத அவை, தியாகி
காணாவறிஞர் - கொடையாளியைக் காணாத ஏழைகள், கொழுநர் காணாத
பெண்கள் - கணவரைப் பிரிந்த பெண்கள், கொண்டல் காணாத மயில் -
முகிலைப் பாராத மயில், சிறுவர் காணா வாழ்வு - குழந்தைகளில்லாத
வாழ்க்கை, கோடை காணாத குயில்கள் - வேனிலையறியாத குயில்கள், வரவு
காணாத செலவு - பொருள் வரவில்லாத செலவு, இவையெலாம் - இவைகள்
யாவும், வாழ்வு காணா இளமையாம் - இன்பம் இல்லாத இளமைப்
பருவத்திற்குச் சமமானவை.
(அருஞ்சொற்கள்)
இந்து
- திங்கள். குமுதம் - அல்லி. ஏந்தல் -
அரசன்: சுரபி - பசு. கலை - ஆண்மான். பேடு - பெண்பறவை. குரவர் -
பெரியோர். கொழுநர் - கணவர். கொண்டல் - முகில்.
(கருத்து)
‘இரவி
காணாத வனசம்' முதலாகக் கூறப்பட்டவை,
‘வாழ்வு காணாத இளமை' போல வாட்ட முறும். (29)
30.
நோய்க்கு வழிகள்
கல்லினால்
மயிரினால் மீதூண் விரும்பலால்
கருதிய விசாரத்தினால்
கடுவழி நடக்கையால் மலசலம் அடக்கையால்
கனிபழங் கறிஉண்ணலால்
|
|