பக்கம் எண் :

53

நெல்லினால் உமியினால் உண்டபின் மூழ்கலால்
     நித்திரைகள் இல்லாமையால்
நீர்பகையி னால்பனிக் காற்றின்உடல் நோதலால்
     நீடுசரு கிலையூறலால்

மெல்லிநல் லார்கலவி அதிகம்உள் விரும்பலால்
     வீழ்மலம் சிக்குகையினால்
மிகுசுமை யெடுத்தலால், இளவெயில் காய்தலால்
     மெய்வாட வேலைசெயலால்

வல்லிரவி லேதயிர்கள் சருகாதி உண்ணலால்
     வன்பிணிக் கிடமென்பர்காண்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மயிலேறி...........குமரேசனே! -, கல்லினால் மயிரினால் -
உணவிலே கல்லும் மயிரும் கலந்திருப்பதாலும், மீதூண் விரும்பலால் -
அதிக உணவை விரும்பி யுண்பதாலும், கருதிய விசாரத்தினால் - கருத்தை
வருத்துங் கவலையினாலும், கடுவழி நடக்கையால் - மிக்க தொலைவு
நடப்பதனாலும். மலசலம் அடக்கையால் - மலசலங்களை அடக்குவதாலும்,
கனிபழம் (பழங்) கறி உணலால் - மிகக்கனிந்த பழத்தையும்
பழங்கறிகளையும் உண்பதாலும், நெல்லினால் உமியினால் - (உணவில்)
நெல்லும் உமியும் இருப்பதாலும், உண்டபின் மூழ்கலால் - உணவுக்குப் பின்
குளிப்பதாலும், நித்திரைகள் இல்லாமையால் - தூக்கக்கெடுதியாலும், நீர்
பகையினால் - (தன் உடம்புக்கு) ஒவ்வா நீரிலே முழுகுவதாலும்,
பனிக்காற்றின் உடல் நோதலால் - பனிகலந்த காற்றிலே மெய்வருத்துவதாலும்,
நீடுசருகு இலை ஊறலால் - சருகும் இலையும் நீண்டநாள் (குடிக்கும் நீரில்)
ஊறிக் கிடப்பதாலும், மெல்லி நல்லார் கலவி அதிகம் உள் விரும்பலால் -
மென்மைத்தன்மையுடைய பெண்களின் சேர்க்கையை மிகவும் மனங்கொண்டு
விரும்பி நடப்பதாலும், வீழ்மலம் சிக்குகையினால் - கழியும் மலம்
சிக்குவதாலும்,