32.
இருந்தும் இறந்தோர்
மாறாத
வறுமையோர் தீராத பிணியாளர்
வருவேட் டகத்திலுண்போர்
மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்
மன்னுமொரு ராசசபையில்
தூறாக
நிந்தைசெய் துய்குவோர் சிவிகைகள்
சுமந்தே பிழைக்கின்றபேர்
தொலையா விசாரத் தழுந்துவோர் வார்த்தையில்
சோர்வுபட லுற்றபெரியோர்
வீறாக
மனையாள் தனக்கஞ்சி வந்திடு
விருந்தினை ஒழித்துவிடுவோர்
வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு
மிக்கசபை ஏறும்அசடர்
மாறாக
இவரெலாம் உயிருடன் செத்தசவம்
ஆகியொளி மாய்வர்கண்டாய்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மயிலேறி...............குமரேசனே! -, மாறாத வறுமையோர் -
நீங்காத வறியவர், தீராத பிணியாளர் - விலகாத நோயாளிகள்,
வருவேட்டகத்தில் உண்போர் - மாமனார் வீட்டில் நீண்டநாள் உண்பவர்,
மனைவியை வழங்கியே சீவனஞ் செய்குவோர் - மனைவியைத்
தீயவொழுக்கத்திலே ஈடுபடுத்தி அதனால் வரும் பொருளால் வாழ்க்கை
நடத்துவோர், மன்னும் ஒருராச சபையில் தூறாக நிந்தை செய்து உய்குவோர்
- தாமிருக்கும் அரசவையிலே வீணான பழியைக் கூறி, அதனால் வாழ்வோர்,
சிவிகைகள் சுமந்தே பிழைக்கின்ற பேர் - (மனிதன் அமர்ந்த) பல்லக்கைச்
சுமந்து வயிறு வளர்ப்போர், தொலையாத விசாரத்து அழுந்துவோர் - நீங்காத
கவலையிலே மூழ்கியவர், வார்த்தையினில் சோர்வுபடலுற்ற பெரியோர் -
சொன்ன சொல்லிலிருந்து
|