பக்கம் எண் :

57

பிறழும் பெரியோர்கள், வீறாக மனையாள் தனக்கு அஞ்சி வந்திடும்
விருந்தினை ஒழித்துவிடுவோர் - மனைவியின் இறுமாப்புக்கு அச்சமுற்று
வந்த விருந்தினரை விலக்கிவிடுவோர், செல்லாத விவகாரமது கொண்டு
மிக்கசபை வீம்புடன் ஏறும் அசடர் - நடவாத வழக்கை ஆதரவாகக்
கொண்டு பெரிய அறமன்றங்களிலே பிடிவாதமாகச் செல்லும்
பிழையாளர்கள், இவரெலாம் மாறாக உயிருடன் செத்தசவம் ஆகி
ஒளிமாய்வர் - இவர்களெல்லாரும் உலகியலுக்கு எதிராக உயிரோடிருந்தும்
இறந்த பிணமாகிப் புகழ் குன்றுவர்.

     (அருஞ்சொற்கள்) வேட்டகம் - மாமனார் வீடு. வேட்ட அகம் -
விரும்பிய வீடு. விருந்து - புதுமை. விருந்தினர் - புதியவர். உறவினர் வேறு
- விருந்தினர் வேறு ஆவர்.

     (கருத்து) இங்குக் கூறப்பட்டவர் உயிருடன் உலவினாலும்
உலகிற்கும் தமக்கும் பயனற்றவர்களாகையால் இறந்தவர் போலக்
கருதப்படுவர்.                                       (32)

      33. சிறிதும் பயன் அற்றவர்

பதரா கிலும்கன விபூதிவிளை விக்கும்
     பழைமைபெறு சுவராகிலும்
பலருக்கும் மறைவாகும் மாடுரிஞ் சிடுமலம்
     பன்றிகட் குபயோகம்ஆம்

கதம்மிகு கடாஎன்னில் உழுதுபுவி காக்கும் வன்
     கழுதையும் பொதிசுமக்கும்
கல்லெனில் தேவர்களும் ஆலயமும் ஆம்பெருங்
     கான்புற்ற ரவமனை ஆம்

இதமிலாச் சவமாகி லும்சிலர்க் குதவிசெய்யும்
     இழிவுறு குரங்காயினும்
இரக்கப் பிடித்தவர்க் குதவிசெயும் வாருகோல்
     ஏற்றமா ளிகைவிளக்கும்