(கருத்து)
குமரேச சதகத்தினைப் பாடுதற்கு மூத்த பிள்ளையாரும் (விநாயகரும்) முருகனும் அருள் புரிவார்கள்.
(வடசொல்)
குமரன் -
இளையோன், ஈசன் - தலைவன், சர வணம் - நாணல். கரம்-கை. குஞ்சரம்
- யானை, வணம் (வர்ணம்) - வடிவு (அழகு).
ஆசிரிய
விருத்தம்
மாரிக்கு
நிகர்என்று பனிசொரிதல் போலவும்,
மனைக்குநிகர்
என்றுசிறுபெண்
மணல்வீடு கட்டுவது போலவும், சந்த்ரன்முன்
மருவுமின் மினிபோலவும்,
பாருக்குள்
நல்லோர் முனேபித்தர் பலமொழி
பகர்ந்திடுஞ் செயல்போலவும்,
பச்சைமயில் ஆடுதற் கிணையென்று வான்கோழி
பாரிலாடுதல் போலவும்,
பூரிக்கும்
இனியகா வேரிக்கு நிகர்என்று
போதுவாய்க் கால்போலவும்,
புகல்சிப்பி முத்துக்கு நிகராப் பளிங்கைப்
பொருந்தவைத் ததுபோலவும்,
வாரிக்கு
முன்வாவி பெருகல்போ லவுமின்சொல்
வாணர்முன் உகந்துபுல்லை
வாலகும ரேசர்மேற்சதகம் புகன்றனன்
மனம்பொறுத் தருள்புரிகவே.
|
(இ-ள்.)
மாரிக்கு
நிகரென்று பனிசொரிதல் போலவும் - மழைக்குச்
சமமாகப் பனிபெய்தல் போலவும், மனைக்கு நிகர் என்று சிறுபெண்
மணல்வீடு கட்டுவது போலவும் - வீட்டுக்கு ஒப்பாகும்படி ஒரு சிறுமி
மணலாலே வீடு கட்டுவது போலவும், சந்த்ரன் முன் மருவும் மின்மினி
போலவும் - திங்களுக்குச் சமமாகப் பொருந்தும்(படி) மின்
|