பக்கம் எண் :

59

        34. ஈயாதவர் இயல்பு

திரவியம் காக்குமொரு பூதங்கள் போல்பணந்
     தேடிப் புதைத்துவைப்பார்
சீலைநல மாகவும் கட்டார்கள் நல்அமுது
     செய்துணார் அறமும்செயார்

புரவலர்செய் தண்டந் தனக்கும்வலு வாகப்
     புகுந்திருட ருக்கும்ஈவார்
புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்
     புராணிகர்க் கொன்றும்உதவார்

விரகறிந் தேபிள்ளை சோறுகறி தினுமளவில்
     வெகுபணம் செலவாகலால்
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளையென
     மிகுசெட்டி சொன்னகதைபோல்

வரவுபார்க் கின்றதே அல்லாது லோபியர்கள்
     மற்றொருவ ருக்கீவரோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மயிலேறி..........குமரேசனே!-, திரவியம் காக்குமொரு
பூதங்கள்போல் பணம்தேடிப் புதைத்துவைப்பார் - பொருளைக் காக்கும்
ஒருவகைப் பூதங்களைப்போலப் பணத்தைச் சேர்த்துப் புதைத்துவைப்பார்;
சீலை நலமாகவும் கட்டார்கள் - நல்ல ஆடையாகவும் உடுத்தமாட்டார்; நல்
அமுதுசெய்து உணார் - நல்ல உணவு சமைத்துச் சாப்பிடமாட்டார்; அறமும்
செயார் - அறவழியிலும் செலவிடார்; புரவலர்செய் தண்டம் தனக்கும்
வலுவாகப் புகும் திருடருக்கும் ஈவார் - அரசர்கள் விதிக்குந் தண்டத்திற்கும்
வற்புறுத்தி நுழையுங் கள்ளருக்குங் கொடுப்பார்; புலவரைக் கண்டவுடன்
ஓடிப் பதுங்குவார் - புலவர்களைப் பார்த்தவுடன் ஓடி மறைவார்;
புராணிகர்க்கு ஒன்றும் உதவார் - புராணங் கூறுவோர்க்குச் சிறிதுங்கொடார்;
பிள்ளை விரகு