அறிந்து சோறுகறி தினும்
அளவில் - குழந்தை அறிவு பெற்றுச் சோறுங்கறியும்
தின்னும் நிலையில், வெகுபணம் செலவு ஆதலால் - மிக்க பொருள்
செலவழிவதனாலே, கிழவனாம் பிள்ளையே விளையாடு பிள்ளையென -
கிழவனாகிய குழந்தையே விளையாடற்கு உரிய குழந்தையென்று, மிகுசெட்டி
சொன்ன கதைபோல் - மிகுந்த செட்டுடைய உலோபி கூறிய கதையைப்போல,
வரவு பார்க்கின்றதே அல்லாது உலோபியர்கள் மற்றொருவருக்கு ஈவரோ? -
பொருள் வருவாயை நோக்குவதை யல்லாமற் பிறருக்கு உலுத்தர்கள்
கொடுப்பாரோ?
(விளக்கவுரை)
புரவலர்
- அரசர். புரத்தல் - காத்தல். புரவலர் -
காத்தலில் வல்லவர். விரகு - அறிவு. ஒரு வணிகன் தன் குழந்தை
(வேலையொன்றும் இனறிப் பொருள்வரும் வழிதேடாமல்) உண்டு
விளையாடுவதற்கு வருந்தி உணவுங்கறியும் உண்ணும் நிலைகடந்த
முதியவனே குழந்தையென்று கூறினான் என்று கதையிருக்கலாம்.
(கருத்து)
உலுத்தர்கள்,
நல்வழியிலே தாங்களாகவே மனம் விரும்பிப்
பொருளைச் செலவிடார். அரசர் தண்டனைக்கும் கள்ளருடைய
கொள்ளைக்குமே கொடுப்பார்கள். (34)
35.
திருமகள் வாழ்வு
கடவா
ரணத்திலும் கங்கா சலத்திலும்
கமலா சனந்தன்னிலும்
காகுத்தன் மார்பிலும் கொற்றவ ரிடத்திலும்
காலியின் கூட்டத்திலும்
நடமாடு
பரியிலும் பொய்வார்த்தை சொல்லாத
நல்லோ ரிடந்தன்னிலும்
நல்லசுப லட்சண மிகுந்தமனை தன்னிலும்
ரணசுத்த வீரர்பாலும்
அடர்கே
தனத்திலும் சயம்வரந் தன்னிலும்
அருந்துளசி வில்வத்திலும்
அலர்தரு கடப்பமலர் தனிலும்இர தத்திலும்
அதிககுண மானரூப
|
|