36.
மூதேவி வாழ்வு
சோரமங்
கையர்கள் நிசம்உரையார்கள் வாயினில்
சூதகப் பெண்கள் நிழலில்
சூளையில் சூழ்தலுறு புகையில் களேபரம்
சுடுபுகையில் நீசர்நிழலில்
காரிரவில்
அரசுநிழ லில்கடா நிழலினொடு
கருதிய விளக்குநிழலில்
காமுகரில் நிட்டையில் லாதவர் முகத்தினில்
கடுஞ்சினத் தோர்சபையினில்
ஈரமில்
லாக்களர் நிலத்தினில் இராத்தயிரில்
இழியுமது பானர்பாலில்
இலைவேல் விளாநிழலில் நிதமழுக் கடைமனையில்
ஏனம்நாய் அசம்கரம்தூள்
வாரிய
முறத்தூள் பெருக்குதூள் மூதேவி
மாறா திருப்பள்என்பர்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மயிலேறி ...........குமரேசனே!-, சோரமங்கையர்கள் - பிற
ஆடவரைக் கூடும் பெண்களிடத்தில், நிசம் உரையார்கள் வாயினில் -
உண்மையுரையார் வாயில், சூதகப்பெண்கள் நிழலில் - வீட்டுவிலக்கான
பெண்களின் நிழலில், சூளையிற் சூழ்தலுறு புகையில் - சூளையில்
உண்டாகும் புகையில், களேபரம் சுடுபுகையில் - பிணஞ்சுடம் புகையில்,
நீசர் நிழலில் - இழிந்த குணமுடையோர் நிழலில், கார் இரவில் - கரிய
இரவில், அரச நிழலில் - அரசமரத்தன் நிழலில், கடா நிழலினொடு -
எருமைக்கடாவின் நிழலில், கருதிய விளக்கு நிழலில் - நினைக்கத்தக்க
விளக்கின் நிழலில், காமுகரில் - காமங்கொண்டவரிடத்தில்,
நிட்டையில்லாதவர் முகத்தினில் - யோகப்பயிற்சி யில்லாதவர் முகத்தில்,
கடுஞ்சினத்தோர் சபையினில் - கொடிய சீற்றமுடையோர்
|