கூட்டத்தில், ஈரமில்லாத
களர்நிலத்தினில் - ஈரம் தங்காத உவர் நிலத்தில்;
இராத்தயிரில் - இரவில் உண்ணப்படுந் தயிரில், இழியும் மதுபானர் பாலில் -
இழிந்த கட்குடியரிடத்தில், இலைவேல் விளாநிழலில் - இலையையுடைய
வேலமரத்தின் நிழலில், விளாமரத்தின் நிழலில், நிதம் அழுக்கு
அடைமனையில் - எப்போதும் அழுக்கடையும் வீட்டில், ஏனம் நாய் அசம்
கரம் - பன்றி நாய் ஆடு கழுதை ஆகிய இவைகளினிடத்தில், தூள் -
புழுதியில், வாரிய முறத்தூள் - முறத்தில் வாரிய தூளில், பெருக்குதூள் -
பெருக்கும் குப்பையில், மூதேவி மாறாது இருப்பள் என்பர் - மூதேவி
விலகாது இருப்பாள் என்பார்கள்.
(அருஞ்சொற்கள்)
களேபரம்
- பிணம். நிட்டை: மனம் ஒருப்பட
இருக்கும்நிலை. ஏனம் - பன்றி. அசம் - ஆடு. கரம் - கழுதை.
(கருத்து)
இங்குக்கூறிய
இடங்களில் மூதேவி வாழ்வாள்.
37.
திருந்துமோ?
கட்டியெரு
இட்டுச் செழுந்தேனை வார்க்கினும்
காஞ்சிரம் கைப்புவிடுமோ
கழுதையைக் கட்டிவைத் தோமம் வளர்க்கினும்
கதிபெறும் குதிரையாமோ
குட்டியர
வுக்கமு தளித்தே வளர்க்கினும்
கொடுவிடம் அலாதுதருமோ
குக்கல்நெடு வாலுக்கு மட்டையைக் கட்டினும்
கோணாம லேநிற்குமோ
ஒட்டியே
குறுணிமை இட்டாலும் நயமிலா
யோனிகண் ஆகிவிடுமோ
உலவுகன கர்ப்பூர வாடைபல கூட்டினும்
உள்ளியின் குணம்மாறுமோ
|
|