பக்கம் எண் :

65

          38. அறியலாம்

மனத்தில் கடும்பகை முகத்தினால் அறியலாம்
     மாநிலப் பூடுகளெலாம்
மழையினால் அறியலாம் நல்லார்பொ லார்தமை
     மக்களால் அறியலாம்

கனம்மருவு சூரரைச் சமரினால் அறியலாம்
     கற்றவொரு வித்துவானைக்
கல்விப்ர சங்கத்தி னாலறிய லாம்குணங்
     களைநடையி னாலறியலாம்

தனதகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம்
     சாதிசொல் லால்அறியலாம்
தருநீதி கேள்வியால் அறியலாம் பிணிகளைத்
     தாதுக்க ளாலறியலாம்

வனசவிக சிதவதன பரிபூர ணானந்த
     வாலவடி வானவேலா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) வனசவிகசித வதன - தாமரை மலரென ஒளிரும்
முகத்தவனே; பரிபூரண ஆனந்த வாலவடிவான வேலா - எங்கும் நிறைந்த
இன்பமான இளமைக் கோலமுடைய வேலவனே!, மயிலேறி......குமரேசனே!-,
மனத்திற் கடும்பகை முகத்தினால் அறியலாம் - உள்ளத்தில் ஊறிய கொடிய
பகைமையை முகக்குறிப்பால் உணரலாம்; மாநிலப் பூடுகளெலாம்
மழையினால் அறியலாம் - பெருநிலத்திலுண்டாகும் புற்பூண்டுகளின்
நிலையை மழை பெய்தால் அறியலாம்; நல்லார் பொலார் தமை
மக்களாலறியலாம் - நல்லவர் பொல்லாதவர் என்பதை மக்கட் பேற்றால்
அறியலாம். கனம் மருவு சூரரைச் சமரினால் அறியலாம் - பெருமை
பொருந்திய வீரரைப் போர்க்களத்திலே பார்க்கலாம்; கற்றவொரு
வித்துவானைக் கல்விப் பிரசங்கத்தினால்