அறியலாம்
- கற்றறிந்த புலவனென்பதை அவையிலே செய்யுஞ்
சொற்பொழிவினால் தெரிந்து கொள்ளலாம்; குணங்களை நடையினால்
அறியலாம் - நல்ல பண்பை ஒழுக்கத்தினால் உணரலாம்; தனது அகம்
அடுத்தது பளிங்கினால் அறியலாம் - பளிங்கினாலே அதனுள்ளேயிருக்கும்
பொருளைப் பார்க்கலாம்; சாதி சொல்லால் அறியலாம் - பிறப்பின் சிறப்பைச்
சொல்லாலே தெரிந்து கொள்ளலாம்; தருநீதி கேள்வியால் அறியலாம் -
அறநூல்களைக் கேட்பதனாலே அறங்களை அறிந்து கொள்ளலாம்;
பிணிகளைத் தாதுக்களால் அறியலாம் - நோய்களை நாடிகளால் உணரலாம்.
(அருஞ்சொற்கள்)
வசனம்
(வட) தாமரை விகசிதம் (வட) ஒளி.
வதனம்(வட) - முகம். பரிபூரணம் (வட) - எங்கும் நிறைவு. ஆனந்தம்
(வட) - இன்பம். பளிங்கு தன்னுள்ளேயிருக்கும் பொருள்களைத்
தெளிவாகக் காட்டும். ‘அடுத்தது காட்டும் பளிங்கு' என்றார் வள்ளுவர்.
‘சாதி சொல்லால் அறியலாம்' என்பது இக்காலத்துக் கேற்றதன்று.
(கருத்து)
இங்குக்
கூறப்பட்டவற்றை அவற்றுடன் கூறப்பட்ட
கருவிகளால் அறியமுடியும். (38)
39. மாறாதது
குணமிலாத்
துட்டமிரு கங்களையும் நயகுணம்
கொண்டுட் படுத்திவிடலாம்
கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது
கொடுத்துத் திருப்பிவிடலாம்
உணர்விலாப்
பிரமராட் சசுமுதல் பேய்களை
உகந்துகூத் தாட்டிவிடலாம்
உபாயத்தி னால்பெரும் பறவைக்கு நற்புத்தி
உண்டாக்க லாம்உயிர்பெறப்
பிணமதை
எழுப்பலாம் அக்கினி சுடாமற்
பெரும்புனல் எனச்செய்யலாம்
பிணியையும் அகற்றலாம் காலதூ துவரையும்
பின்புவரு கென்றுசொலலாம்
|
|