மணலையும்
கயிறாத் திரிக்கலாம் கயவர்குணம்
மட்டும் திருப்பவசமோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. |
(இ-ள்.)
மயிலேறி...........குமரேசனே!-,
குணம் இலாத் துட்ட
மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்திவிடலாம் - நல்ல குணம்
இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலேவசப்
படுத்திவிடலாம், கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது
கொடுத்துத் திருப்பி விடலாம் - கொடுமையான பல நச்சுநோய்களை
யெல்லாம் மருந்தைக் கொடுத்து மாற்றிவிடலாம்; உணர்விலாப்
பிரமராட்சசுமுதல் பேய்களை உகந்து கூத்தாட்டிவிடலாம் - அறிவில்லாத
பிரமராட்சசு முதலான பேய்களை விரும்பு முறையிலே கூத்தாடச்செய்து
நீக்கிவிடலாம்; உபாயத்தினாற் பெரும்பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம்
- கிளி முதலிய பெரிய பறவைகளுக்குத் தந்திரத்தினாலே நல்லறிவைத்
தரலாம்; உயிர்பெறப் பிணமதை யெழுப்பலாம் - பிணத்தை உயிர்பெறச்
செய்துவிடலாம்; அக்கினி சுடாமல் பெரும்புனல் எனச் செய்யலாம் -
நெருப்பைச் சுடாமற் குளிர்ந்த மிகுதியான நீரைப்போ லாக்கி விடலாம்;
பிணியையும் அகற்றலாம் - நோயையும் நீக்கலாம்; கால தூதுவரையும்
பின்பு வருக என்று சொலலாம் - காலனுடைய தூதுவர்களையும்
பிற்காலத்தில் வருக என்று கூறலாம்; மணலையுங்கயிறாத் திரிக்கலாம் -
மணலைக் கயிறாக்கலாம்; கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ? -
கடைப்பட்டவரின் பண்பை மட்டும் மாற்ற இயலாது.
(கருத்து)
இங்குக் கூறப்பட்ட கொடுவிலங்கு முதலானவற்றைத்
திருத்தினாலும் கீழ்மக்களை நன்முறையிலே திருப்பமுடியாது. (39)
|