40. மக்களில்
விலங்குகள்
தான்பிடித்
ததுபிடிப் பென்றுமே லவர்புத்தி
தள்ளிச்செய் வோர்குரங்கு
சபையிற் குறிப்பறிய மாட்டாமல் நின்றவர்
தாம்பயன் இலாதமரமாம்
வீம்பினால்
எளியவரை எதிர்பண்ணி நிற்குமொரு
வெறியர்குரை ஞமலியாவர்
மிகநாடி வருவோர் முகம்பார்த்தி டாலோபர்
மேன்மையில் லாதகழுதை
சோம்பலொடு
பெரியோர் சபைக்குள் படுத்திடும்
தூங்கலே சண்டிக்கடா
சூதுடன் அடுத்தோர்க் கிடுக்கணே செய்திடும்
துட்டனே கொட்டுதேளாம்
மாம்பழந்
தனைவேண்டி அந்நாளில் ஈசனை
வலமாக வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|