வருவோர் முகம்பார்த்திடா
லோபர் மேன்மையில்லாத கழுதை - தங்களை
மிகவும் விரும்பி வருவோரின் முகத்தையும் நோக்காத உலுத்தர்கள் இழிந்த
கழுதையாவார்; சோம்பலோடு பெரியோர் சபைக்குள் படுத்திடுந் தூங்கலே
சண்டிக்கடா - சான்றோர் அவையிலே சோம்பிப் படுத்திருக்குந்
தூங்குமூஞ்சி சண்டித்தனமுள்ள எருமைக்கடா ; சூதுடன் அடுத்தோர்க்கு
இடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம் - தன்னை நம்பி
வந்தவர்களுக்கு வஞ்சகமாகத் துன்பமே செய்திடும் கயவன் கொட்டுகின்ற
தேளாவான்.
(அருஞ்சொற்கள்)
ஞமலி
- நாய். இடுக்கண் - துன்பம்.
மாம்பழக்கதை
சிவபிரான்
கையில் ஒரு சிறந்தமாம்பழம் இருந்தது. அதைப்
பெறச்சிறுவர்களான கணபதியும் முருகனும் போட்டியிட்டனர். ‘யார்
இவ்வுலகை முதலிற் சுற்றிவருவார்களோ அவர்களுக்கே இந்த பாம்பழம்'
என்றார் பரமனார். முருகன் உடனே விரைந்து மயிலேறி உலகைச் சுற்றிவரப்
போய்விட்டார். கணபதி சிறிது சிந்தித்துத் தம் தந்தையே உலகம் என்ற
உண்மையை உணர்ந்து, தந்தையைச் சுற்றிவந்து மாம்பழத்தைப்
பெற்றுக்கொண்டார். பின் வந்த முருகன் தாம் ஏமாற்றப்பட்டதாக எண்ணிப்
பிணங்கிப் கைலையைவிட்டு வந்துவிட்டார், அவரை மகிழ்விக்கவே
சிவபெருமான் அவரைப் ‘பழம்நீ' அன்றோ என்று தேற்றினார். ‘பழம்நீ'
என்பதே ‘பழநி' என மருவியது. இவ்வாறு புராணம் கூறுகிறது. ஆனால்,
இந்நூலாசிரியர் ‘ஈசனை வலமாக வந்த முருகா!' என்கிறார். இவ்வாறு
வேறுகதையிருக்கிறதுபோலும்.
(கருத்து)
பெரியோர்
சொல்லைக் கேட்கவேண்டும். அவையிலே
குறிப்பறியுந் திறமை வேண்டும். எளியாரை எதிரிட்டுக் கொள்ளக்கூடாது.
ஈகைப் பண்பு வேண்டும். பெரியோர் அவையிலே துயிலக்கூடாது.
அடுத்தவரைக் கெடுத்தல் ஆகாது. (40)
41.
அற்பருக்கு வாழ்வு
அற்பர்க்கு
வாழ்வுசற் றதிகமா னால்விழிக்
கியாவருரு வும்தோற்றிடா
தண்டிநின் றேநல்ல வார்த்தைகள் உரைத்தாலும்
அவர்செவிக் கேறிடாது
|
|