பக்கம் எண் :

70

முற்பட்சம் ஆனபேர் வருகினும் வாரும்என
     மொழியவும் வாய்வராது
மோதியே வாதப் பிடிப்புவந் ததுபோல
     முன்காலை அகலவைப்பார்

விற்பனம் மிகுந்தபெரி யோர் செய்தி சொன்னாலும்
     வெடுவெடுத் தேசிநிற்பார்
விருதா மகத்துவப் பேயது சவுக்கடி
     விழும்போது தீருமென்பார்

மற்புயந் தனில்நீப மாலையணி லோலனே
     மார்பனே வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மல்புயந்தனில் நீபமாலையணி லோலனே! மார்பனே!
வடிவேலவா! - மல்லுக்குரிய வலிய தோளிலே கடப்பமாலை அணிந்த
இனியனே! அழகிய மார்பனே! கூரிய வேற்படையை யேந்தியவனே!,
மயிலேறி........குமரேசனே!-, அற்பர்க்கு வாழ்வு சற்று அதிகம் ஆனால்
விழிக்கு யாவர் உருவும் தோன்றிடாது - இழிந்த குணமுடையவர்க்குச்
செல்வாக்குச் சிறிது மிகுதியானால் யாருருவமும் கண்களுக்குத் தெரியாது;
அண்டிநின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும் அவர் செவிக்கு ஏறிடாது
- நெருங்கிநின்று இன்மொழி இயம்பினாலும் அவர்களுடைய செவியில்
செல்லாது; முன்பட்சமானபேர் வருகினும் வாரும் என மொழியவும்
வாய்வராது - முன்நாளிலே அன்பாக இருந்தவர்கள் வந்தாலும் வாருங்கள்
என்று கூறவும்வாய் எழாது; வாதப்பிடிப்பு வந்ததுபோல முன்காலை
மோதியே அகலவைப்பார் - வாதநோய் வந்தவர்கள்போல முன்காலை
விரைந்து நீட்டிவைத்து நடப்பார், (நடையிலே இறுமாப்புக் காணப்படும்);
விற்பனம் மிகுந்த பெரியோர் செய்தி சொன்னாலும் வெடுவெடுத்து
ஏசிநிற்பார் - அறிவிற்சிறந்த பெரியோர்கள் ஏதாவது சொன்னாலும்
கடுகடுத்து வைதிடுவார்கள்;