விருதா மகத்துவப்
பேயது சவுக்கடி விழும்போது தீரும் என்பார் -
(அவர்களைப் பிடித்த) வீண்பெருமைப் பேய் சவுக்கடி விழுந்தால் நீங்கும்
என்று (பெரியோர்) கூறுவர்; (தண்டனைக்கல்லது) வேறெதற்கும்
அஞ்சமாட்டார்.
(அருஞ்சொற்கள்)
நீபம் -
கடம்பு. லோலன் (வட) - இனியன்.
விற்பனம் (வட) - அறிவு.
(கருத்து)
கீழோர்க்குச்
செல்வம் வந்தால் எவரையும் அன்புடன்
நோக்கார். இன்மொழிகளை ஏற்கமாட்டார். செல்வம் வருமுன்
அன்பாயிருந்தவரையும் வரவேற்கமாட்டார். இறுமாப்புடன் நடந்துகொள்வார்.
பெரியோர் மொழியை ஏற்கமாட்டார். உதைப்போர்க்கே அஞ்சுவர். (41)
42.
மக்களில் தீய கோள்கள்
அன்னைதந்
தையர்புத்தி கேளாத பிள்ளையோ
அட்டமச் சனியாகுவான்
அஞ்சாமல் எதிர்பேசி நிற்குமனை யாள்வாக்கில்
அங்கார கச்சன்மமாம்
தன்னைமிஞ்
சிச்சொன்ன வார்த்தைகே ளாஅடிமை
சந்திராட் டகமென்னலாம்
தன்பங்கு தாவென்று சபையேறு தம்பியோ
சார்ந்தசன் மச்சூரியன்
நன்னயமி
லாதவஞ் சனைசெய்த தமையன்மூன்
றாமிடத் தேவியாழம்
நாடொறும் விரோ தமிடு கொண்டோன் கொடுத்துளோன்
ராகுகே துக்களெனலாம்
மன்னயனை
அன்றுசிறை தனிலிட்டு நம்பற்கு
மந்திரம் உரைத்தகுருவே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
அன்று மன்
அயனை சிறைதன்னில் இட்டு நம்பற்கு மந்திரம்
உரைத்த குருவே - முற்காலத்தில் நிலை
|