பக்கம் எண் :

72

பெற்ற நான்முகனைச் சிறையில்வைத்துச் சிவபெருமானுக்குப்
பிரணவப்பொருளை உரைத்த ஆசிரியனே!, மயிலேறி.........குமரேசனே! -,
அன்னை தந்தையர் புத்திகேளாத பிள்ளையோ அட்டமச்சனி ஆகுவான் -
பெற்றோர் சொல்லைக் கேளாத சிறுவன் அவர்களுக்கு எட்டாமிடச் சனி
போன்றவன்; அஞ்சாமல் எதிர்பேசி நிற்கும் மனையாள்வாக்கில் அங்காரகச்
சன்மம்ஆம் - அச்சமின்றி எதிர்த்துப் பேசி நிற்கும் இல்லாள்
வாக்கிலேயிருக்கும் செவ்வாய் எனப் பிறந்தவள்; தன்னை மிஞ்சிச் சொன்ன
வார்த்தை கேளா அடிமை சந்திர அட்டகம் என்னலாம் - தனக்கு
மீறியவனாகிக் கூறியமொழி கொள்ளா வேலைக்காரன் எட்டாமிடத் திங்கள்
என்று கூறலாம்; தன்பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ சார்ந்த சன்மச்
சூரியன் - தன்னுடைய பங்கைக் கொடுக்கச் சொல்லி மன்றில் வழக்கிடுந்
தம்பி பிறப்பிடத்திலே கதிரவன் ஆவான்; நல்நயம் இலாத வஞ்சனைசெய்த
தமையன் மூன்றாம் இடத்தில் வியாழன் - நல்ல இனிமையில்லாமல்,
வஞ்சனைசெய்த மூத்தோன் மூன்றாம் வீட்டிலே வியாழன் ஆவான்;
நாள்தொறும் விரோதம்இடு கொண்டோன் கொடுத்தோன் இராகுகேதுக்கள்
எனலாம் - எப்போதும் பகைமை பாராட்டுங் கொண்டானுங் கொடுத்தானும்
ஒருவர்க்கொருவர் இராகுவையுங் கேதுவையும் போன்றவர்.

     (விளக்கவுரை) பிறந்த ஓரைக்கு (இலக்கினத்திற்கு) எட்டாம் வீட்டிற்
சனியும், சந்திரனும், வாக்குக்குரிய வீட்டில் உள்ள செவ்வாயும் பிறந்த
வீட்டிற் சூரியனும், மூன்றாம் வீட்டில் வியாழனும், இராகுகேதுக்களும்
கொடிய கோள்கள்.

     (கருத்து) பெற்றோர் சொல்லை மக்கள் தட்டி நடத்தலாகாது.
கணவனை எதிர்த்துப் பேசுவது மனைவிக்குத் தகாது. பணிசெய்வோன்
லைவன் சொற்படி நடத்தல்வேண்டும். தம்பி தமையனுடன் பங்குக்காக
வழக்கிடுதல் நன்மையன்று. தமையனுந் தம்பியை ஏமாற்றல் கூடாது.
கொண்டானுங் கொடுத்தானும் எப்போதும் பகைத்துக் கொள்ளல் நன்றன்று.                                                       (42)