பக்கம் எண் :

73

       43. நல்லினஞ் சேர்தல்

சந்தன விருட்சத்தை அண்டிநிற் கின்றபல
     தருவும்அவ் வாசனைதரும்
தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும்
     சாயல்பொன் மயமேதரும்

பந்தம்மிகு பாலுடன்வ ளாவியத ணீரெலாம்
     பால்போல் நிறங்கொடுக்கும்
படிகமணி கட்குளே நிற்கின்ற வடமுமப்
     படியே குணங்கொடுக்கும்

அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடில்
     அடுத்ததும் பசுமையாகும்
ஆனபெரி யோர்களொடு சகவாசம் அதுசெயின்
     அவர்கள் குணம் வருமென்பர்காண்

மந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தஅரி
     மருகமெய்ஞ் ஞானமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) முன் மந்தர நெடுங்கிரியின் கடல்கடைந்த அரிமருக -
முற்காலத்தில் மந்தரம் எனும் பெரிய மலையினாலே கடலைக்கடைந்த
திருமாலின் மருமகனே!, மெய்ஞ்ஞான முருகா - உண்மையறிவான
முருகனே!, சந்தன விருட்சத்தை அண்டிநிற்கின்ற பலதருவும் அவ்வாசனை
தரும் - சந்தனமரத்தைச் சார்ந்து நிற்கின்ற பல மரங்களும் சந்தன மணமே
தரும்; தங்க மகமேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன்மயமே தரும்
- பொன்மயமான மாமேருவைச் சார்ந்த காக்கையும் பொன்நிறச் சாயல்
கொடுக்கும்; பந்தம்மிகு பாலுடன் வளாவிய தணீரெலாம் பால்போல்
நிறங்கொடுக்கும் - பாலுடன் பொருந்துகின்ற தண்ணீரைக் கலந்தால் அந்த
நீர் முழுதும் பால் போலவே தெரியும்; படிகமணிகட்கு உளே நிற்கின்ற