பக்கம் எண் :

74

வடமும் அப்படியே குணம் கொடுக்கும் - படிகமணியிற் கோத்த நூலும்
படிகம்போலவே நிறம் தரும்; அந்தம்மிகு மரகதக்கல்லைத் திரித்திடில்
அடுத்ததும் பசுமை ஆகும் - அழகுமிக்க பச்சைக்கல்லை அணிந்தால்
அதனைச் சார்ந்ததும் பசுமையாகவே இருக்கும்; ஆன பெரியோர்களொடு
சகவாசம் அதுசெயின் அவர்கள் குணம் வருமென்பர் - ஆக்கமுடைய
பெரியோர்களை நட்புக்கொண்டால் அவர்களுடைய குணம் வரும் என்பர்
(அறிஞர்).

     (கருத்து) உலகப்பொருள்கள் சார்ந்ததன் வண்ணமாகவே இருத்தல்
இயல்பு.                                                    (43)

        44. ஊழின் பெருவலி

அன்றுமுடி சூடுவ திருக்கரகு ராமன்முன்
     அருங்கா டடைந்ததென்ன
அண்டரெல்லாம் அமிர்தம் உண்டிடப் பரமனுக்
     காலம் லபித்ததென்ன

வென்றிவரு தேவர்சிறை மீட்டநீ களவில்வே
     டிச்சியை சேர்ந்ததென்ன
மேதினி படைக்கும் அயனுக்கொரு சிரம்போகி
     வெஞ்சிறையில் உற்றதென்ன

என்றும்ஒரு பொய்சொலா மன்னவன் விலைபோன
     தென்னகாண் வல்லமையினால்
எண்ணத்தி னால்ஒன்றும் வாராது பரமசிவன்
     எத்தனப் படிமுடியுமாம்

மன்று தனில் நடனமிடு கங்கா தரன்பெற்ற
     வரபுத்ர வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மன்றுதனில் நடனமிடு கங்கா தரன் பெற்ற வரபுத்ர
வடிவேலவா - பொது அரங்கிலே கூத்தாடும்