பக்கம் எண் :

75

சிவபிரான் அருளிய சிறந்த மகனே! வடிவேலனே! மயிலேறி............
குமரேசனே!-, அன்று முடிசூடுவது இருக்க ரகுராமன்முன் அருங்காடு
உறைந்தது என்ன - முற்காலத்தில் அன்றைக்கு முடி சூடுவதாக
முடிவுசெய்தும் (அதுமாறி) இராமன் காட்டிலே வாழநேர்ந்தது ஏன்?,
அண்டரெல்லாம் அமிர்தம் உண்டிடப் பரமனுக்கு ஆலம் லபித்தது என்ன
- வானவரெல்லோரும் அமுதம் உண்ணவும், சிவபிரானுக்குமட்டும் நஞ்சு
கிடைத்தது ஏன்?, வென்றிவரு தேவர் சிறைமீட்ட நீ களவில் வேடிச்சியைச்
சேர்ந்தது என்ன - வெற்றியையுடைய வானவரைச் சிறையிலிருந்து
வெளிவிடுத்த நீ களவிலே வேடுவர் மகளைக் கலந்தது ஏன்?, மேதினி
படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம்சிறையில் உற்றது என்ன -
உலகைப் படைக்கும் பிரமனுக்கு ஒருதலை பறிமுதலாகி, அவன்
கொடுஞ்சிறையிலும் இருக்க நேர்ந்தது என்ன, என்றும் ஒரு பொய்சொலா
மன்னவன் விலைபோனது என்ன - எப்போதும் பொய்சொல்லாத
அரிச்சந்திரன் விலைப்பட்டது ஏன்?, வல்லமையினால் எண்ணத்தினால்
ஒன்றும் வாராது - ஒருவருடைய வலிமையினாலும் சூழ்ச்சியினாலும் எதுவும்
நடவாது; பரமசிவன் எத்தனப்படி முடியுமாம் - பரமசிவன் திட்டமிட்டவாறே
நடைபெறும்.

     (விளக்கவுரை) ஊழின் பெருவலிமையைக் கூறவந்தவர் பரமசிவன்
எத்தனப்படியே யாவும் முடியும் என்றார். மேலும் பரமசிவனுக்கே ஊழைக்
கடக்கமுடியாது என்பதற்கு அவர் நஞ்சு உண்டது ஊழினால் என்கிறார்.
வானவர்கள் துன்புறாமல் நஞ்சை உண்டது ஊழ்வினையினால் என்பது
பொருந்தாது. ஊழின் வலிமை நம்மால் தடுத்துக்கொள்ள முடியாதது.
சிவபிரான் நஞ்சை உண்டதும் அத்தகைய நிலைதானா? முருகன்
வள்ளியம்மையைக் களவில் மணந்ததும் ஊழ்வினையா? அது அவருடைய
விளையாட்டென்று தான் புராணம் கூறும். ஆகையால், இங்குக் கூறியவற்றில்
சில ஒவ்வாதிருப்பது காண்க. மேதினி (வட) - உலகம். மன்று - அவை.
கங்கையை முடியில் தரித்தவர் கங்காதரர்.

     (கருத்து) ஊழ்வினையை வெல்வது அரிது.             (44)