நூல்
1.
முருகன் திருவிளையாடல்
பூமிக்கொ
ராறுதலை யாய்வந்து சரவணப்
பொய்கைதனில் விளையாடியும்,
புனிதற்கு மந்த்ரவுப தேசமொழி சொல்லியும்
பாதனைச் சிறையில் வைத்தும்,
தேமிக்க
அரியரப் பிரமாதி கட்கும்
செகுக்கமுடி யாஅசுரனைத்
தேகம் கிழித்துவடி வேலினால் இருகூறு
செய்தமரர் சிறைதவிர்த்தும்,
நேமிக்குள்
அன்பரிடர் உற்றசம யந்தனில்
நினைக்குமுன் வந்துதவியும்,
நிதமுமெய்த் துணையாய் விளங்கலால் உலகில்உனை
நிகரான தெய்வமுண்டோ
மாமிக்க தேன்பருகு பூங்கடம் பணியும்மணி
மார்பனே ! வள்ளிகணவா !
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மிக்க தேன் மா பருகு
பூ கடம்பு அணியும் அணி மார்பனே
- மிகுந்த தேனை வண்டுகள் அருந்தும் அழகிய கடப்பமாலை புனைந்த
அழகிய மார்பனே!, வள்ளி கணவா - வள்ளியம்மையார் கணவனே!,
மயிலேறி விளையாடு குகனே - மயிலில் அமர்ந்து திருவிளையாடல் புரியும்
குகனே!, புல்வயல்நீடு மலை மேவு குமரேசனே! - திருப்புல் வயலில்
உயர்ந்த மலையின்மேல் எழுந்தருளிய குமரக் கடவுளே!, பூமிக்கு ஓர்
ஆறுதலையாய் வந்து - உலகிற்கு ஓர் அமைதியை உண்டாக்க எழுந்தருளி,
சரவணப் பொய்கைதனில் விளையாடியும் - நாணல் நிறைந்த குளத்திலே
திருவிளையாடல் புரிந்தும், புனிதற்கு மந்த்ர உபதேசமொழி சொல்லியும் -
குற்ற மற்றவனான சிவபிரா
|